Category: News

  • திங்க் ஸ்டுடியோஸ் (ThinkStudios) தயாரிப்பில் உருவாகும் கவின் – பிரியங்கா மோகன் படத்தில் இணைந்த சாண்டி மாஸ்டர்

    கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாண்டி மாஸ்டர்

    திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் கென் ராய்சன் இயக்கத்தில், கவின் – பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் இணைந்துள்ளார். இப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், படக்குழு ஒரு அட்டகாசமான போஸ்டர் மற்றும் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது.

    பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து உருவான கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணிக்கு ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே அபாரமான வரவேற்பு இருந்து வருகிறது. அவர்களுடைய இயல்பான நட்பு, கலகலப்பான உரையாடல்கள், ஜாலியான கெமிஸ்ட்ரி ஆகியவை ரசிகர்களை எப்போதும் உற்சாகப்படுத்தி வந்தது. அந்த வெற்றிகரமான கூட்டணி மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது, ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியையும் பெரும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.

    கவினும் சாண்டி மாஸ்டரும் மாடர்ன் கெட்டப்பில், வாயில் வெடியை வைத்தபடி “Boys Are Back” என அறிவிக்கும் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, அறிவிப்பு வீடியோவும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. கலகலப்பான ஒரு ஆபிஸ் சூழலில் அனைத்தும் கலைந்து கிடக்கும் நிலையில், கேமரா மெதுவாக சுழன்று பின்னே நாற்காலியில் அமர்ந்த நிலையில் பிரியங்கா மோகன் அறிமுகமாக, இறுதியாக போஸ்டரில் காணப்பட்ட அதே லுக்கில் கவின் – சாண்டி மாஸ்டர் கூட்டணியுடன் வீடியோ நிறைவடைகிறது.

    இந்த அசத்தலான அறிவிப்பு வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் உற்சாகமாக பகிர்ந்து, பாராட்டி வருகிறார்கள்.

    இத்திரைப்படத்திற்கு ஓஃப்ரோ (OFRO) இசையமைக்கிறார். ஃபேண்டஸி – ரொமான்டிக் – காமெடி ஜானரில் உருவாகும் இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்வரூப் ரெட்டி தயாரிக்கிறார்.

    இப்படம் தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    கவின் – பிரியங்கா மோகன் ஜோடி முதன்முறையாக இணைந்திருப்பதே ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது சாண்டி மாஸ்டரும் இணைந்திருப்பது இப்படத்தின் மீது எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. கண்டிப்பாக ரசிகர்களை உற்சாகப்படுத்தும் கலகலப்பான எண்டர்டெயினராக இப்படம் இருக்கும்

  • அர்ஜூன் தாஸ், அன்னா பென் மற்றும் யோகிபாபு, வடிவுக்கரசி நடிக்கும் “கான் சிட்டி”(Con City) பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் !!

    ‘கான் சிட்டி’ (Con City)– பட டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் !!

    தமிழ் சினிமாவில் புதுமையான கதைக்களங்களுடன் ரசிகர்களை கவரும் படைப்புகள் தொடர்ந்து உருவாகி வரும் நிலையில், முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இந்த ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்

    இப்படத்தில் முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென், நகைச்சுவை நடிகர் யோகிபாபு  ஆகியோருடன் வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

    இப்படம், Power House Pictures நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி இயக்கி வருகிறார். 

    ‘கான் சிட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்தவுடன் புன்னகை வரவைக்கும் அதே நேரம்,  ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் எமோஷனல் பக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.  நகரப் பின்னணியில், ஆபிஸ் பேக்குடன் அர்ஜூன் தாஸ் அவரைச் சுற்றி ஹேண்ட் பேக்குடன் அன்னா பென்,  பயணப்பெட்டி பையுடன் யோகிபாபு மற்றும் வடிவுக்கரசி ஆகியோருடன் வீல் சேரில் ஒரு வெற்றிக் கோப்பையுடன் குழந்தை அகிலன் என,  முற்றிலும் வித்தியாசனான  இந்த போஸ்டர்,  படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் எனும் ஆவலைத் தூண்டுகிறது. கான் சிட்டி எனும் தலைப்பு இது முழுமையான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் படம் என்பதை உணர்த்துகிறது.

    இதுவரை படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மங்களூர், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

    புதுமையான டைட்டில் & ஃபர்ஸ்ட்லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

    தமிழில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும்  இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்  இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் ரசிகர்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

    தொழில்நுட்ப குழு

    எழுத்து & இயக்கம்: ஹரிஷ் துரைராஜ்
    தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
    ஒளிப்பதிவு: அரவிந்த் விஸ்வநாதன்
    எடிட்டிங்: அருள் மோசஸ்
    இசை: ஷான் ரோல்டன்
    கலை இயக்கம்: ராஜ் கமல்
    உடை வடிவமைப்பு: நவா ராம்போ ராஜ்குமார்
    ஸ்டண்ட்: ஆக்ஷன் சந்தோஷ்
    மக்கள் தொடர்பு: யுவராஜ்

  • சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர்  வெளியீடு

    தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டிருக்கிறது.

    முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத,  ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி. ஆர். பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற, நடனத்தை  எம். ஷெரீப்பும், சண்டை காட்சிகளை பி. சி. ஸ்டண்ட்டும் அமைக்கிறார்கள்.  உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் .

    இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் ‘ மை லார்ட் ‘ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான சசிகுமார் பேசும் வசனங்களும், விளிம்பு நிலை மக்களுக்கான ஜனநாயக உரிமைகளும் சிறுநீரக திருட்டு தொடர்பான காட்சி அமைப்புகளும் ரசிகர்களை கவனத்தை‌ ஈர்த்திருக்கிறது.  அரசியல் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை உணர்வு பூர்வமாக விவரிப்பதால் இந்த முன்னோட்டம் அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

    தேசிய விருதினை வென்ற படைப்பாளியான ராஜு முருகன் –  தொடர்ந்து வெற்றி படங்களை வழங்கி வரும் சசிகுமார் ஆகிய இருவரும் முதன்முறையாக ‘மை லார்ட்’ படத்தில் ஒன்றிணைந்திருப்பதாலும்…  டிரெய்லர் இடம் பிடித்திருக்கும் உணர்வுபூர்வமான காட்சிகளாலும் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது.

    Link – https://www.youtube.com/watch?v=KR05JMlq8K8

  • Draupathi 2 Visited Producer Kalaipuli S Dhanu in person and conveyed their heartfelt Thanks .

    Director Mohan G tweeted requesting Producer Kalaipuli S Dhanu to shift the release date of Theri Vijay sir Movie, based on his request Producer announced that Theri release is postponed to another date, which will be announced today. Draupathi 2 Producer Sola Shakkaravarthi and Director
    Mohan G went personally and thanked Dhanu sir for his kind gesture.

  • திரௌபதி2 பட குழுவினர் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்

    இயக்குநர் மோகன் ஜி, நடிகர் விஜய் நடித்த ‘தெரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றுமாறு தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவிடம் ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று, ‘தெரி’ திரைப்படத்தின் வெளியீடு மற்றொரு தேதிக்கு மாற்றப்படுவதாக தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அறிவித்துள்ளார். புதிய தேதி இன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனைத் தொடர்ந்து, ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் சோலா சக்கரவர்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ஜி ஆகியோர் நேரில் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணுவை சந்தித்து, அவரது ஆதரவுக்கு மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

  • பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்கும், இயக்குநர் பரத் மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியாகியுள்ளது!

    தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான திறமையான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ். ஒவ்வொரு படத்திலும் தன் நடிப்பை மெருகேற்றி வருபவர் தனக்கென தனியிடத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கியுள்ளார். அவரது நடிப்பில் வரவிருக்கும் ’மெஜந்தா’ படத்தின் டீசரில் அவரது நடிப்பை பார்த்த ரசிகர்கள் ‘சாந்தனு 2.0’ என கொண்டாடி வருகின்றனர். இதுவரை அவர் நடித்த படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சாந்தனுவை பார்க்கும் விதமாக அவரது தோற்றமும் நடிப்பும் அமைந்துள்ளது. கதாநாயகனுக்கான சரியான கதாபாத்திரத்தை இயக்குநர் பரத் மோகன் வடிவமைத்துள்ளார். கதாநாயகியாக நடிகை அஞ்சலி நாயரும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

    படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் உயர்ந்துள்ளது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘இஃக்லூ’ படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பரத் மோகன் ’மெஜந்தா’ படத்தை எழுதி இயக்கியுள்ளார். ‘மெஜந்தா’ படத்தை பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜெ.பி. லீலாராம், ராஜு, சரவணன் பா, ரேகா லீ தயாரித்திருக்க, நவீன்ராஜா இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ளார்.

    இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அர்ச்சனா ரவிச்சந்திரன், ஆர்ஜே ஆனந்தி, பக்ஸ், படவா கோபி, சரத் ரவி, சௌந்தர்யா பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை பல்லூ மேற்கொள்ள, படத்தொகுப்பை பவித்ரன் கே செய்துள்ளார். கலை இயக்குநராக பிரேம் கருந்தமலை பணியாற்றியுள்ளார்.

  • Brand Blitz Entertainment presentsFilmaker Bharath Mohan’s directorialShanthu Bhagyaraj’s “Magenta” Teaser explores life and emotions

    Actor Shanthnu Bhagyaraj has been one among the rarest actors, who has consistently flexed his best to explore his acting potentials. With every film, he has tried exhibiting his best acting nuances, and with slow and steadiness, he has carved a niche of excellence. The teaser of his upcoming film ‘Magenta’ distinctly radiates Shanthnu 2.0 as his expressions and screen presence are totally unique from his erstwhile movies. Kudos to director Bharath Mohan, who has crafted a perfect characterisation for the protagonist. Of course, Anjali Nair has achieved a magnetising charisma with her presence.

    The teaser has instantly garnered colossal response from the film enthusiasts, and the expectations have got decorous for the film’s release.

    The makers will be soon announcing the film’s trailer, audio and worldwide theatrical release date.

    Magenta is written and directed by Bharath Mohan, who earlier fascinated the cinema lovers with critically-acclaimed ‘Igloo’. The film is produced by Dr. JP Leelaram, Raju K, Saravanan B, Rekha L of Brand Blitz Entertainment, and is co-produced by Naveenraja KS.

    While Shanthu Bhagyaraj and Anjali Nair are playing the lead characters, the others in the star-cast include Archana Ravichandran, RJ Ananthi, Bucks, BadavaGopi, Sharath Ravi, Soundarya Priyan among others.

    Dharan Kumar is composing music for this film, which features cinematography by Ballu, editing Pavithran K and Art Direction by Prem Karuthamalai.

  • ZEE5 தமிழ் 2026-ஐ திகிலான பொழுதுபோக்கு வரிசையுடன் தொடங்குகிறது – ஜீவா & ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோருடன் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பமானது !!

    ZEE5 தமிழ், 2026-ஆம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி பொழுதுபோக்குகளை வழங்குவதில் முன்னணியில் உள்ளது. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் கதைகளுடன், வலுவான திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களின் வரிசையை கொண்ட ZEE5 தமிழ், இதுவரை இல்லாத அளவிலான தீவிரமான கதைகள் மற்றும் முழுமையான பார்வை அனுபவங்களை இந்த ஆண்டு வழங்கத் தயாராக உள்ளது.

    2026-க்கான ZEE5 தமிழின் வேகம் ஏற்கனவே துவங்கிவிட்டது. தளபதி விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா, ZEE5 உள்ளடக்கங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் நாளில் அதிகமான சந்தாதாரர்களை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடித்த “மாஸ்க்” திரைப்படம் பெற்ற பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. ZEE5 இந்த ஆண்டில் வலுவான தொடக்கத்தை உறுதி செய்துள்ளது.

    இந்த வெற்றியின் தொடர்ச்சியாக, ZEE5 தமிழ், ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடிப்பில் உருவான சிறப்பு பொங்கல் பிராண்ட் திரைப்படத்தை வெளியிட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு திகில் நிறைந்த பொழுதுபோக்கை வழங்கும் தனது வாக்குறுதியை மேலும் வலுப்படுத்தும் இந்த கொண்டாட்டம், “ZEE5-இல் இந்த பொங்கல் – திகில் பொங்கல்” என்ற விளம்பர வாசகம் மூலம், இந்த விழாக்காலம் முழுவதும் சஸ்பென்ஸ், பரபரப்பு மற்றும் ஈர்க்கும் கதையாக்கம் நிறைந்ததாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

    🔗 – https://youtu.be/9zd7u-vKS9g

    பாரம்பரியமான பொங்கல் கொண்டாட்ட பின்னணியில் அமைந்த இந்த பிராண்ட் திரைப்படம், ஒரு மர்ம சம்பவம் நிகழ்வதன் மூலம் எதிர்பாராத திருப்பத்தை எடுக்கிறது. ஜீவா உறுதியான விசாரணை அதிகாரியாக நடிக்க, ஆண்ட்ரியா அந்த மர்மத்தின் மையக் கதாபாத்திரமாக மாறுகிறார். கதைக்களத்தின் உஷ்ணத்தையும், நியோ நாயர் பாணி திகில் சூழலையும் இணைக்கும் இந்த கதை, 2026-க்கான ZEE5 தமிழின் பலவகை திரில்லர் வகை உள்ளடக்க திட்டத்தை பிரதிபலிக்கிறது.

    இந்த பொங்கலிலிருந்து, ZEE5 தமிழ் பார்வையாளர்களுக்கு வலுவான திரைப்பட வரிசையையும் வழங்குகிறது. இதில், விக்ரம் பிரபு மற்றும் L.K. அக்ஷய் குமார் நடித்த விமர்சகர்களால் பாராட்டப்பட்ட “சிறை” திரைப்படம் இடம் பெற்றுள்ளது. மற்றும் பிளாக்பஸ்டர் திகில் திரைப்படமான டிமாண்டி காலனி-யின் இரண்டாம் பாகப் படமும் வெளியாகவுள்ளது. இதோடு, சமுத்திரக்கனி நடித்த “பார்த்த ஞாபகம் இல்லையோ” மற்றும் ஒன்ஸ் அப்ஆன் எ டைம் இன் காயம்குளம் ஆகிய ஒரிஜினல் சீரிஸ்களும் இடம்பெறுகின்றன.

    ZEE5 தமிழின் 2026 உள்ளடக்கத் திட்டம் குறித்து பேசிய லாய்ட் C. சேவியர்,
    பிஸ்னஸ் ஹெட் – தமிழ் & மலையாளம் ZEE5, சீனியர் வைஸ் பிரசிடென்ட் (SVP) – மார்க்கெட்டிங், தென் இந்தியா கூறியதாவது:
    “திகில் நிறைந்த, அதிக தாக்கம் கொண்ட பொழுதுபோக்கை வழங்கும் தெளிவான நோக்கத்துடன் ZEE5 தமிழ் 2026-இல் காலடி எடுத்து வைத்துள்ளது. ஜனநாயகன் இசை விழா மற்றும் கவினின் மாஸ்க் படம் ஆகியவற்றிற்கு கிடைத்த பெரும் வரவேற்பு, சக்திவாய்ந்த உள்ளடக்கத்திற்கான பார்வையாளர்களின் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. எங்கள் பொங்கல் கொண்டாட்ட திட்டம் மற்றும் பரபரப்பான திரைப்பட, தொடர் வரிசையுடன், தமிழ் ஒடிடி பொழுதுபோக்கில், புதிய உயரங்களை எட்டவும், ஆண்டுதோறும் பார்வையாளர்களை ஈர்க்கவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.”

    இந்த கொண்டாட்டத்தின் முகமாக இருக்கும் நடிகர் ஜீவா கூறியதாவது:
    “ZEE5 தமிழ் உடன் பணியாற்றியது அருமையான அனுபவமாக இருந்தது. பார்வையாளர்களை நேரடியாக இணைக்கும் வகையில் திகில் மற்றும் ரசிகர்களை ஈர்க்கும் கதைகளை வழங்குவதில் இந்த குழு முழு கவனம் செலுத்துகிறது. இந்த பொங்கல் படம், இந்த ஆண்டு ZEE5 தமிழில் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் விழாக்கால உற்சாகத்தையும் திகிலையும் சிறப்பாக பிரதிபலிக்கிறது.”

    நடிகை ஆண்ட்ரியா ஜெரமையா கூறியதாவது:
    “இந்த படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். “மாஸ்க்” திரைப்படத்தின் புரமோஷனை க்ரியேட்டிவாக இதில் இணைத்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. என் நண்பன் ஜீவாவுடன் இணைந்து பணியாற்றியதும் சந்தோஷம். பார்வையாளர்கள் இதற்கு எப்படி வரவேற்பு தருவார்கள் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்.”

    திகில் நிறைந்த திரில்லர்கள், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மற்றும் அதிரடியான சீரிஸ்களால் நிரம்பிய கண்டண்ட் வரிசையுடன், ZEE5 தமிழ் தனது பார்வையாளர்களுக்கான விழாக்காலமும் ஆண்டு முழுவதுமான பொழுதுபோக்கையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதுடன், 2026-ஐ தமிழ் ஓடிடி கதைக்களத்தை ஒரு மைல்கல்லாக மாற்ற தயாராக உள்ளது.

    ZEE5 பற்றி:
    ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது.
    12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது.
    உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.

    Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.

  • Dhanush’s ‘Kara’ First Look Unveiled: An Emotionally Rooted Thriller Set in the 90s

    The first look of “Kara”, starring National Award winner Dhanush and produced by Vels Film International Limited, has been officially released and is receiving an overwhelming response from fans and cinema lovers.

    Produced on a massive scale by Vels Film International Limited, the film is backed by Dr. Ishari K. Ganesh as producer, with his daughter Kushmitha Ganesh serving as co-producer. Set in the 1990s, ‘Kara’ traces the journey of a young man named Karasaami and unfolds as an emotionally rooted thriller layered with mystery and suspense.

    The film is directed by Vignesh Raja, who earlier delivered the blockbuster Por Thozhil. He has co-written the screenplay along with Alfred Prakash, continuing their successful collaboration.

    The striking and innovatively designed first look offers a glimpse into the film’s scale, mood, and narrative depth, promising a gripping cinematic experience.

    Kara features Mamitha Baiju opposite Dhanush in their first collaboration and boasts a strong supporting cast including K S Ravikumar, Jayaram, Suraj Venjaramoodu, Karunas, and Prithvi Rajan, among others.

    With meticulous attention to detail, the film recreates the 1990s through carefully designed period sets and visuals. The project was shot over 80 days across Chennai, Ramanathapuram, and Kovilpatti.

    The technical crew includes National Award winner G V Prakash Kumar as music composer, Theni Eswar as cinematographer, Sreejith Sarang as editor, Mayapandi as production designer, and Dinesh Manohar and Kavya Sriram handling costume design.

    Producer Dr. Ishari K. Ganesh says “Kara is shaping up to be a standout cinematic experience”. After watching the rough cut, he expressed strong confidence in the film’s emotional resonance and technical brilliance, noting that the performances of all the artistes are exceptional and add significant depth to the narrative. He added that Kara possesses all the elements required to strike a powerful chord with audiences and leave a lasting impression.

    On the production front, Vels Film International Limited continues to build an impressive slate for 2026, with Mookuthi Amman 2 starring Nayanthara which is in the post- production phase along with Dayangaram starring VJ Siddhu and UNKILL_123 starring Anurag Kashyap currently under production.

    Additionally, Label Vels Music International will hold all music rights for Kara, further enhancing the film’s commercial strength and promotional reach.

    Currently in the final stages of post-production, the makers will announce details of the teaser, trailer, and audio launch soon. Kara is slated for a summer 2026 release, with Netflix having acquired the film’s OTT streaming rights.

  • “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம் !!

    சத்தமாய் பேசும் திரையுலகில் மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த Zee Studios “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு !

    அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு வசனம் கூட இல்லாமல், முழுக்க முழுக்க மௌனம், உணர்வு மற்றும் தாக்கம் கொண்ட காட்சிகள் மூலம் பார்வையாளரை கட்டிப் போடும், ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த டீசர் உருவாகியுள்ளது.

    வார்த்தைகள் இல்லாத போதிலும், இந்த டீசர் நம்முள் பல கேள்விகளை எழுப்புகிறது. தீவிரமான காட்சிகளும், மௌன இடைவெளிகளும், நம்முள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, “காந்தி உண்மையில் என்ன பேசப் போகிறார்?” என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. சொல்லப்படாத விஷயங்களின் பாரம் மௌனத்தின் மூலம் வலுவாக உணர்த்தப்படுகிறது.

    நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகிய அபூர்வமான நடிகர் குழு வார்த்தைகள் இன்றியே உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறமையை டீசரில் நிரூபித்துள்ளனர்.

    கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், இப்படத்திற்கு, இசை ஜாம்பவான் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இசையே கதையின் குரலாக மாறி, ஒவ்வொரு மௌனத்தையும், பதற்றத்தையும், சொல்லப்படாத எண்ணங்களையும் உணர்ச்சிபூர்வமாக உயர்த்துகிறது.

    Zee Studios வழங்க, Kyoorius Digital Pvt Ltd, Pincmoon Meta Studios மற்றும் Movie Mill Entertainment இணைந்து தயாரிக்கும் காந்தி டாக்ஸ், திரை மொழியின் வழக்கமான விதிகளை உடைக்கும், மௌனத்தை ஒரு சக்திவாய்ந்த கதையாக்கமாக மாற்றும் வித்தியாசமான திரையரங்கு அனுபவமாக இருக்கும்.

    2026 ஜனவரி 30 அன்று “காந்தி டாக்ஸ்” திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    youtu.be/Dv3qq4-TSv8