சென்னை: கொரோனா நோயாளிகளை கண்டறிய தினமும் 100 காய்ச்சல் முகாம்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியளித்தார். கோவையில் 6,312 காய்ச்சல் முகாம்கள் நடத்தி பரிசோதனை செய்யப்படுகிறது என கூறினார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 5,821 படுக்கை வசதிகள் உள்ளன எனவும் கூறினார். கோவையில் இதுவரை 8532 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர் எனவும் கூறினார். முகக்கவசம் அணிவதை மக்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கூறினார்
கொரோனா நோயாளிகளை கண்டறிய தினமும் 100 காய்ச்சல் முகாம்கள் நடத்த திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

Written by
in
Leave a Reply