Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சீன் திரை விமர்சனம்

Posted on November 6, 2026

ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சீன்’ (Scene) திரைப்படம் இன்று (6 நவம்பர் 2026) அதிகாலை 6 காட்சி ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றன.

சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லென் கே. கபூர் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இத்திரைப்படத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ‘சீன்’ படத்தின் ரிலீஸை முன்னிட்டு சூர்யா ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் ,பாலாபிஷேகம் செய்து திரையரங்குகளில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்..

சூர்யா இதுவரை நடித்திராத முற்றிலும் வித்தியாசமான ஒரு நகைச்சுவை கலந்த அதிரடி கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டியுள்ளார் அவரது திரை ஆளுமை படத்திற்கு மிகப்பெரிய பலம் உள்ளது திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார் நடிகர் சூர்யா..

கிரைம் பிரான்ச் போலீஸ் அதிகாரியாக இருக்கும் சூர்யா (இன்பா), அந்தப் பணியில் இருந்து விடுபட நினைக்கிறார். இதனால் சுற்றியிருப்பவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்கிறார். அதே நேரத்தில், நகரில் ஒரு சைக்கோ கொலையாளியின் பாணியில் சில படுகொலைகள் அரங்கேறுகின்றன. இந்த வழக்கை சூர்யா கையில் எடுக்க முற்படும்போது, அவருக்கு கண் பார்வை இல்லை என்ற மிகப்பெரிய ரகசியம் காவல்துறைக்குத் தெரிய வருகிறது. இத்தகைய வீக்னஸ் மற்றும் சவால்களுக்கு இடையே, காவல்துறையின் கண்காணிப்பையும் மீறி சூர்யா அந்த சைக்கோ கொலையாளியைக் கண்டுபிடித்தாரா, இல்லையா என்பதே ‘சீன்’ படத்தின் விறுவிறுப்பான கதை

  • சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !
  • சீன் திரை விமர்சனம்
  • மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்
  • ராமாயணா திரை விமர்சனம்
  • VELS ORGANISES DIVINE PRAYERS FOR THE SUCCESS OF MOOKUTHI AMMAN 2
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme