சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம், திரை கதையின் இறுதி அரை மணி நேரம் 90-களின் பக்திப் பட பாணியில் திரைக்கதை அமைத்து திரையரங்கில் குடும்பத்தோட ரசிக்கக்கூடிய பக்தி காவியமாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தயாரிப்பு: ஐசரி கணேஷ், குஷ்பு சுந்தர், நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் அவினி சினிமேக்ஸ்.
மூக்குத்தி அம்மன் 2: மஹாசக்தி’ திரைப்படம், முதல் பாகத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத ஒரு புதிய கதைக்களத்துடன், பிரமாண்டமான அமானுஷ்ய மற்றும் பக்தித் திருப்பங்கள் நிறைந்த ஒரு கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2: திரைகதையில் அமானுஷ்ய அனுபவங்களை கனவில் தோன்றும் குதிரை, பேய் மற்றும் மயக்கம் எதிர்கொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நயன்தாரா.
‘மயிலாஞ்சி’ என்ற கிராமத்தில் இருந்து வரும் ஒரு மர்மமான குரலைக் கேட்டு, அந்த ஊருக்கு நயன்தாரா பதவிஉயர்வு பெற்று தானாக முன்வந்து அவர் அந்தகிராமத்திற்கு மாறுதல்வாங்கி காவல்துறைஅதிகாரியாக மயிலஞ்சி கிராமத்திற்கு வருக்கிறார். மைலாஞ்சி கிராமத்தில் குகை ஒன்றில் பல வருட காலம் ஜீவா சமாதி அடைந்து மறுபிறபு எடுத்து உலகையே ஆள நினைக்கும் சாத்தானின் கூட்டத்தைச் சேர்ந்த தீயசக்தியான ரெஜினாவும் அவரது மந்திரவாதிகளும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர்.• ஆபத்தில் இருக்கும் மக்களைக் காப்பாற்ற, தான் யார் என்பதை உணராத நயன்தாராவிற்குள் இருக்கும் மூக்குத்தி அம்மன் எப்படி மறுபிறவி எடுத்து, சூலமேந்தி தீயசக்திகளை வதம் செய்கிறார் என்பதே மூக்குத்தி அம்மன் 2 படத்தின் திரைகதை.
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் கதையின் நாயகி நயன்தாராவின் அப்பாவிப் பெண்ணாகவும், கிளைமாக்ஸில் சூலம் ஏந்தி வரும் ஆக்ரோஷமான அம்மனாகவும் நயன்தாரா மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சண்டைக் காட்சிகளில் அவர் காட்டியுள்ள மாஸ் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது

துணை நடிகர்கள் தங்களின் அனுபவ நடிப்பின் மூலம் திரையில் காண்போரை ரசிக்க வைத்தனர், ஊர்வசி, யோகி பாபு, ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், அபிநயா, நிதின் சத்யா மற்றும் பலர். சிறப்புத் தோற்றத்தில் நடிகைகள் குஷ்பு மற்றும் சினேகா நடித்துள்ளனர்.
ஹிப் ஹாப் தமிழாவின் மிரட்டலான பின்னணி இசையும், அம்மன் அவதாரக் காட்சிகளுக்கான பாடல்களும் தியேட்டரில் பக்திப் பரவசத்தையும் சாமியாடும் உணர்வையும் தருகின்றன