Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

லெனின் பாண்டியன் திரை விமர்சனம்

Posted on September 26, 2026

Rating 3.5/5


‘லெனின் பாண்டியன் திரைப்படத்தின் புதுமுக இயக்குனர் டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ‘லெனின் பாண்டியன் இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் நாயகனாக அறிமுகமாக, முக்கிய கதாபாத்திரங்களில் கங்கை அமரன் மற்றும் நடிகை ரோஜா நடித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில்
கிராமத்து வாழ்வியலையும் இயற்கை வளச் சுரண்டலையும் சுட்டிக்காட்டும் மிகச் சிறந்த சமூகக் கருத்தை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைத்து அங்குள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயி துரைராசு (கங்கை அமரன்) – சந்தனம் (ரோஜா) தம்பதியினர் ஆடு வளர்த்து வருகின்றனர் ஆடு மணல் திருடும் லாரியில் சிக்கி இறந்துவிடுகிறது. இதுகுறித்து காவல் நிலையம் செல்லும் துரைராசு அதிகார வர்க்கத்தின் பலத்தால் கால்நிலையத்தில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறார். பின்னர், அந்த கிராமத்தையே மணலுக்காக சூறையாடும் சக்திவாய்ந்த அரசியல் பின்னணி கொண்ட கும்பலுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தை நாடுகிறார். அவருக்குத் துணையாக நிற்கும் ஒரு இளம் காவலர் (தர்ஷன் கணேசன்) மற்றும் கிராம மக்களின் நீதிக்கான போராட்டமே லெனின் பாண்டியன் திரைக்கதை.


சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன் கணேசன் முதல் படத்திலேயே முத்திரை பதித்துள்ளார்.சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து, பிறகு தன் கதாபாத்திரம் உணர்ந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே திரையில் காண்போரின் கவனத்தைப் பெறுகிறார் நாயகன்.

கங்கை அமரன் & ரோஜா தங்களது அனுபவம் நடிப்பின் மூலம் வயதான தம்பதிகளாக தங்களின் எதார்த்தமான மற்றும் அனுபவபூர்வமான நடிப்பால் படத்தின் எமோஷனல் காட்சிகளைத் திரையில் காண்பவரை சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்து சிறப்பாக நடித்துள்ளனர்.

போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியான், அர்ச்சனா ரவிச்சந்திரன், ‘ஆடுகளம்’ நரேன் மற்றும் யுகேந்திரன் ஆகியோர் தங்களின் அனுபவ நடிப்பின் மூலம் திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளனர் மற்றும் இவர்களின் நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்துள்ளது.


இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது

.

  • பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!
  • இயக்குநர்கள் வெற்றி மாறன் – அமீர் ஆகியோரின் கூட்டறிக்கை.
  • மாரனாடு கருப்பணசாமி கோவிலில் பிரம்மாண்டமாக துவங்கியது தனுஷின் D56 !!
  • Dhanush’s D56 Begins Grandly at Karuppanasamy Temple !
  • SK27 Movie Pooja Ceremony | Sivakarthikeyan’s Next Film Begins With Grand Pooja
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme