Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

இயக்குநர்கள் வெற்றி மாறன் – அமீர் ஆகியோரின் கூட்டறிக்கை.

Posted on September 27, 2026

ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் கொடுஞ்செயல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
இந்த உலகைப்பற்றியே முழுதும் அறியாத பிஞ்சுச் சிறுமிகளை குறிவைத்து அரங்கேற்றப்பட்டுள்ள இந்தத் தீய செயல்கள் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும்.
வீரமணியை பாதுகாக்க முயன்ற — அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள், அல்லது அதிகாரமிக்க நபர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு, பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சட்டத்தின் முன் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
மேலும், பாலியல் துன்புறுத்தலால் அதிர்ச்சிக்குள்ளான அந்த சிறுமிகளுக்குத் தேவையான சட்ட, உளவியல் மற்றும் சமூக மறுவாழ்வு அளிக்கப்படுவதோடு, அவர்களின் அடையாளமும் கண்ணியமும் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.
இனி வருங்காலங்களில் பெண்கள் சிறுமிகள் சிறுவர்கள் மீது பாலியல் தொல்லை கொடுக்கும் குற்றவாளிக்கு எந்தவித தளர்வுகளும் இன்றி மிகக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுவதே இது போன்ற குற்றச்்செயல்கள் இனி நடைபெறாமல் இருக்க வழி வகை செய்யும்.
வீரமணியின் இந்த வழக்கை விசாரிக்கும்
சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) எந்தவித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும்.
மேலும் மனித நேயத்தை கேள்விக்குறியாக்கும் பாலியல் குற்றங்களை செய்பவர்கள் எவராயினும் அவர்களுக்கு எதிராகவே எங்களுடைய குரல் எப்போதும் ஒலிக்கும்.

இப்படிக்கு
வெற்றி மாறன்
அமீர்

  • நடிகர் ரன்பீர் கபூர் பிறந்தநாளில் ‘ராமாயணா’ படக்குழு வெளியிட்ட சிறப்பு BTS காட்சிகள்
  • Ranbir Kapoor As Lord Rama: Ramayana Makers Share Special BTS Glimpse On The Actor’s Birthday
  • TWO ₹100-CRORE STARS. ONE EXTRAORDINARY CINEMATIC JOURNEY.
  • 100 கோடி வசூல் நாயகர்கள் இணைந்த இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழுமலை’ : அக்-1 உலகெங்கும் ரிலீஸ் !
  • Grand 3rd Look and Teaser Launch of ‘Dhrogam Pazhagu’ at Kovai Rathinam College: Enthusiastic Welcome from 4,000 Students!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme