Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சண்டக்காரி திரை விமர்சனம்

Posted on September 18, 2026

ஆர். மாதேஷ் இயக்கத்தில் திரை கதையின் நாயகியாக ஸ்ரேயா சரண் நடித்து திரையில் தனி கவனம் பெறுகிறார், நாயகனாக விமல் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சண்டக்காரி’ (Sandakari) திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சண்டக்காரி திரை கதை லண்டனில் தொடங்குகிறது தனியார் நிறுவனத்தில் ஸ்ரேயா (மாயா) நேர்மையான மற்றும் கண்டிப்பான சி.எம்.ஓ (CMO) நிறுவனத்தின் பணிபுரிகிறார். அந்த நிறுவனத்தில் மாயா உதவியாளர் (Assistant) வேலைக்கு வந்து சேருகிறார் நாயகன் விமல். அதே சமயம் அவருக்கு முன்னால் அந்த வேலையில் 30க்கும் மேற்பட்டோர் ஸ்ரேயாவின்( மாயா) கோபத்திற்கும் மற்றும் டார்ச்சர் தாங்காமல் வேலை விட்டு செல்கின்றனர் அப்போது நாயகன் அந்த வேலைக்கு வருபவர் அந்த வேளையில் நீடித்தாரா?


கதையின் நாயகி ஸ்ரேயா( மாயா) மற்றும் நாயகன் விமல் அவர்களின் மோதல் காதலாக மாறியதா?


கதையின் நாயகி ஸ்ரேயா( மாயா) தனது ஊழியர்களிடம் கோபம் கொள்ள காரணம் என்ன?

கதையின் நாயகி ஸ்ரேயா சரண் (மாயா) கதாபாத்திரத்தில் எனது அனுபவம் நடிப்பின் மூலம் ஸ்டைலாகவும், கவர்ச்சியாகவும் வந்து ஒட்டுமொத்த படத்தையும் மாயாவாக தன் தோள்களில் தாங்கிப் பிடித்துள்ளார் மாயா திரையில் காண்பவரை ரசிக்க வைத்துள்ளார்.


லண்டன் பின்னணியில் நகரும் முதல் பாதியும், தமிழ்நாட்டின் பின்னணியில் நகரும் இரண்டாம் பாதியும் குடும்பங்கள் ரசிக்கும்படியான காதல் மாற்று காமெடி மற்றும் பாசம், நட்பு போன்ற பின்னணியில் திரை கதை அமைத்து திரையில் காண்போரை ரசிக்கவும் வைத்துள்ளது சண்டைக்காரி திரைப்படம்.


குருதேவின் ஒளிப்பதிவு லண்டன் மற்றும் தமிழ்நாடு என இரண்டு சூழல்களையும் அழகாகக் காட்டியுள்ளது படத்திற்கு மிக பலம். அம்ரிஷின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது.

  • என்ன விலை திரை விமர்சனம்
  • தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்
  • சண்டக்காரி திரை விமர்சனம்
  • ஷபீர் சுல்தான் – Chinmayi sripaada இணைந்த ‘வான்மதி’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
  • SHABIR SULTHAN AND CHINMAYI SRIPADA’S ‘VAANMATHI’ RECEIVES WARM RESPONSE; CHENNAI PROMOTIONAL EVENT DRAWS ENTHUSIASTIC AUDIENCE
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme