
ராமநாதபுரம் மாவட்டம் கடலோரக் மீனவ கிராமங்களில் பாரம்பரியமாக நடக்கும் பாய்மரப் படகுப் போட்டியை மைய கதையாக அமைத்து மீனவர்களின் வாழ்வியலை மற்றும் அவர்களின் உணர்வுகளையும் திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது மண்டாடி திரைப்படத்தின் திரைக்கதை. மீனவர்களுக்கிடையே நடக்கும் பாரம்பரிய பாய்மர படகு பந்தயத்தில் தன்னைச் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல மாரி (மிதுன் ஜெய் சங்கர்) முயற்சி செய்கிறார். அப்பொழுது அதிர்ஷ்டவசமாக சட்டாப்புலியின் ஆட்களிடம் இருந்து தப்பிக்க மாரி சென்னைக்கு ஓடிவந்து முத்துக்காளியிடம் (சூரி) தஞ்சம் அடைகிறார். முன்னாள் படகுப் போட்டியாளரான முத்துக்காளி, இந்த பகையை எப்படி எதிர்கொள்கிறார், பாய்மர படகு போட்டியால் இரு பிரிவினருக்கும் ஏற்படும் வன்மத்தை பகை எவ்வாறு தீர்த்து வைக்கிறார் மற்றும் நீதியையும் ஒற்றுமையையும் நாயகன் சூரி எவ்வாறுபெற்றுத் தருகிறார் என்பதும் மண்டாடி திரைக்கதையில் குடும்ப உணர்வு, காதல், நட்பு, போன்ற உணர்வுகளோடு பாய்மரப் படகுப் போட்டிகளில் வன்மத்தையும் இந்த ‘மண்டாடி’ படத்தின் திரைக்கதை.
மாரியை கொள்ள முயற்சிக்கும் காரணம் என்ன?
நாயகன் சூரியன் காதல் என் தோல்வியில் முடிய காரணம் என்ன?
பாய்மரப் படகுப் போட்டியில் சிறந்து விளங்கும் நாயகன் விலகி செல்வது ஏன்?
சத்யராஜ் முனி மற்றும் நாயகன்
இது போன்ற கேள்விக்கு பதிலே மண்டாடி திரைப்படத்தின் திரைக்கதை.
நாயகன் சூரி தனது சிறப்பான நடிப்பை காதல், பாசம், ஆக்ஷன் ஹீரோவாக திரையில் காண்போர ரசிக்க வைத்துள்ளார் குறிப்பாக தனது நடிப்பின் மூலம் மீனவ குடும்ப நபராக திரையில் காணும் பொழுது வெள்ளித்திரைகள் காண்போரின் மனதில் ஜொலிக்கிறார் நாயகன் சூரி, அதிலும் போட் போட்டி காட்சிகளுக்கு பயிற்சி கொடுக்கும் போது தனது அனுபவ நடிப்பை திரையில் காண்பவரை ரசித்த வைக்கிறார் நாயகன் சூரி வெற்றி நாயகனாக தமிழ் திரை உலகில் வலம் வருவார்.
நடிகர் சத்யராஜ் “முனி ” என்ற கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் திரையில் ரசிக்க வைத்துள்ளார்.
பாய்மரப் படகுப் போட்டி நடுக்கடலில் நடக்கும் போட்டிகளையும் சாகசங்களையும் வெவ்வேறு கோணங்களில் மிரட்டலாகப் படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ். ஆர். கதிர். ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசையும், பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சிகளும் படத்திற்குப் பெரும் பலம் சேர்க்கின்றன.