
ராமநாதபுரம் மாவட்டம் கடலோரக் மீனவ கிராமங்களில் பாரம்பரியமாக நடக்கும் பாய்மரப் படகுப் போட்டியை மைய கதையாக அமைத்து மீனவர்களின் வாழ்வியலை மற்றும் அவர்களின் உணர்வுகளையும் திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது மண்டாடி திரைப்படத்தின் திரைக்கதை. மீனவர்களுக்கிடையே நடக்கும் பாரம்பரிய பாய்மர படகு பந்தயத்தில் தன்னைச் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல மாரி (மிதுன் ஜெய் சங்கர்) முயற்சி செய்கிறார். அப்பொழுது அதிர்ஷ்டவசமாக சட்டாப்புலியின் ஆட்களிடம் இருந்து தப்பிக்க மாரி சென்னைக்கு ஓடிவந்து முத்துக்காளியிடம் (சூரி) தஞ்சம் அடைகிறார். முன்னாள் படகுப் போட்டியாளரான முத்துக்காளி, இந்த பகையை எப்படி எதிர்கொள்கிறார், பாய்மர படகு போட்டியால் இரு பிரிவினருக்கும் ஏற்படும் வன்மத்தை பகை எவ்வாறு தீர்த்து வைக்கிறார் மற்றும் நீதியையும் ஒற்றுமையையும் நாயகன் சூரி எவ்வாறுபெற்றுத் தருகிறார் என்பதும் மண்டாடி திரைக்கதையில் குடும்ப உணர்வு, காதல், நட்பு, போன்ற உணர்வுகளோடு பாய்மரப் படகுப் போட்டிகளில் வன்மத்தையும் இந்த ‘மண்டாடி’ படத்தின் திரைக்கதை.
மாரியை கொள்ள முயற்சிக்கும் காரணம் என்ன?
பாய்மரப் படகுப் போட்டியில் சிறந்து விளங்கும் நாயகன் விலகி செல்வது ஏன்?
இது போன்ற கேள்விக்கு பதிலே மண்டாடி திரைப்படத்தின் திரைக்கதை.