
தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் வீட்டுப் பொறுப்புகள் மகளான ஆதிரையிடம் (பூர்ணிமா ரவி) வந்துவிட, அதனால் அவரது காதலனுடனான உறவு முறிந்துவிடுகிறது.இந்நிலையில் இயந்திர வாழ்க்கையில் தன்னையே இழந்துவிட்டதாக உணர்கிறார் ஆதி. தந்தை சோமசுந்தரத்தின் (டெல்லி கணேஷ்) ஓர் ஆறுதல் வார்த்தையும், பழைய புகைப்பட ஆல்பத்தில் தட்டுப்படும் ஒரு பழைய நினைவும் அவரைத் திடீரென கேரளாவுக்கு ஒரு தனிப்பயணத்தைத் தொடங்க வைக்கிறது.தன்னை வளர்த்த பாட்டியையும் பழைய நண்பர்களையும் சந்திக்க வேண்டும் என்ற நோக்கத்துக்கு ஏதுவாக, வழியில் சந்திக்கும் சாய் (வைபவ் முருகேசன்) என்ற இளைஞனும் உதவத் தொடங்குகிறார். இருவரின் சாலைப் பயணம் எந்தெந்த பாதைக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது என்பதே இந்த ‘எல்லோ’திரைப்படத்தின் திரைக்கதை.