அதர்ஸ் திரை விமர்சனம்

திரைப்படத்தின் தொடக்க காட்சியில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு சாலையில் கல்லை வைத்து திட்டமிடப்பட்ட கொள்ளை முயற்சி நடைபெறுகிறது, எதிர்பாராத விதமாகக் கோரமான வேன் தீ விபத்தாக முடிகிறது. வேனிலிருந்த நான்கு பேர் உடல் கருகிய நிலையில் உயிரிழக்கின்றனர். இந்த வழக்கை உதவி ஆணையர் மாதவ் (ஆதித்யா மாதவன்) விசாரிக்கத் தொடங்குகிறார்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், வேனை ஓட்டி வந்த டிரைவர் அங்கு இல்லை எனவும், இறந்தவர்களில் மூவர் பார்வையற்ற பெண்கள் எனவும், ஆணுடன் ஏற்கனவே கழுத்தில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இறந்துள்ளதாகவும்   தெரிய வருகிறது.

நாயகி கௌரி கிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மருத்துவராக பணியாற்றுகிறார் அங்கு செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை மூலம் குழந்தை பெற முயலும் மருத்துவமனைகளில் சதி நடப்பதாகவும் கண்டுபிடிக்கிறார் நாயகி கௌரி கிருஷ்ணா கணவர் உதவி ஆணையர் மாதவ் (ஆதித்யா மாதவன்) . இந்த இரண்டு சம்பவங்களின் பின்னணியில் நடக்கும் குற்றம் என்ன அதற்கு யார் (ஆண் ,பெண்ணா அல்லது மற்றவர்களா “”OTHER’S””) காரணம் போன்ற கேள்விக்கு பதில் ‘அதர்ஸ்’ படத்தின் திரை கதை.

அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன் முதல் படத்தில் போலீஸ்காரராக மிகை நடிப்பில்லாத உடல்மொழி என பாஸாகிறார். குறைந்த இடத்தில் வந்தாலும் தனக்கான பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் நாயகி கௌரி கிஷன்.

முக்கியமான கதாபாத்திரத்தில் சுமேஷ் மூர் மீமிகை நடிப்பை திரையில் ரசிக்கும் படி கொடுத்துள்ளார். மற்றும் ஹரீஷ் பேரடி, நண்டு ஜெகன், அஞ்சு குரியன் ஆகியோர் நடிப்பு திரையில் அசிங்கபடி உள்ளது .