
கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக உள்ளனர். கிசன் தாஷிற்கு பள்ளி பருவத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்த பிறகு அவருக்குள் காதல் மலர்கிறது. அதன் பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளில் காதல் செய்கிறார், ஆனால் அது தோல்வியில் முடிவடைகிறது. பிறகு அவரது தந்தையின் கட்டாயத்தின் பேரில் ஒரு பிரபல மேட்ரிமோனி நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு பாஸாக வரும் ஷிவாத்மிகாவை பார்த்தவுடன் பிடித்துப் போகிறது. நாயகி தனது முதல் காதல் தோல்வியில் முடிந்ததால் அவருக்கு காதல் என்றால் ஏதோ ஒரு வித வெறுப்பு அதனால் அவருக்கு காதல் என்றாலே பிடிக்காது. நாயகியின் இரண்டாவது காதல் இறுதியில் நிறைவேறியதா இல்லையா?
நாயகனின் மூன்றாவது காதல் நிறைவேற அவருக்கு உதவியது யார்?
போன்ற கேள்விக்கு பதில் ஆரோமலே படத்தினை திரைக்கதை, ஒரு பெண்ணின் உணர்வை உன்னதமாக சொல்லும் ஆரோமலே திரைப்படம் இதனை அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.
மினி ஸ்டுடியோ சார்பில் எஸ் வினோத் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஆரோமலே. அறிமுக இயக்குனர் சாரங் தியாகு இந்த படத்தை இயக்க கிஷன் தாஸ், ஹர்ஷத் கான், ஷிவாத்மிகா ராஜசேகர், மேகா ஆகாஷ், வி.டி.வி கணேஷ், துளசி, சந்தான பாரதி, சிபி ஜெயக்குமார், நம்ரிதா எம்.வி, சந்தியா வின்ஃப்ரெட் மற்றும் பலர் இந்த கதைக்கு நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளார் . சித்து குமார் இந்த படத்திற்கு இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவும், பிரவீன் ஆண்டனி எடிட்டிங் மற்றும் ஸ்கிரிப்ட் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர் ஆரோமலே திரை படம் அனைவரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம்.