Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

காட்ஸ்ஜில்லா’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம் – நாயகன் தர்ஷன்பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது 

Posted on September 15, 2025

சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் – தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்; புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு “ரோம்-காம்” வகை. இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் ‘சரண்டர்’ என்ற படம் மூலம் புகழ் பெற்ற தர்ஷன், மற்றும் பலர் நடிக்கின்றனர்இயக்குனர் மோகன் குரு செல்வா இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கிய “காட்ஸ்ஜில்லா” திரைப்படம்;சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற “பிளாக் மெயில்” படத்தின் வெற்றியை தொடர்ந்து வித்யாசமான “ரோம் காம்” படமான “காட்ஸ் ஜில்லா” படத்தை தயாரிக்கும் சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி. தனஞ்ஜெயன் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ். பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் வெளியான ‘சரண்டர்’ படத்திற்காக நல்ல பாராட்டுகளைப் பெற்ற தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் மோகன் குரு செல்வா இயக்கத்தில் ரோம்-காம் படமான “காட்ஸ் ஜில்லா” படத்தை தயாரிக்கின்றனர்.இப்படத்தின் பூஜை செப்டம்பர் 15ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழிவினர், மற்றும் சினிமா துறையை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்: தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு , FEFSI தலைவர் R.K. செல்வமணி, இயக்குனர் விஜய், இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ்.மோகன் குரு செல்வா இயக்கத்தில் உருவாகும் “காட்ஸ்ஜில்லா” படமானது, ரோம்-காம், புராணக் கற்பனையும், நகைச்சுவையும், காதலையும் ஒருங்கிணைக்கும் வித்தியாசமான கதை சொல்லலாக இருக்கும். காதலில் தோல்வியுற்ற இளைஞன் ஒருவரின் வாழ்க்கையில் தெய்வீக தலையீடு நிகழ்வதன் மூலம் சுயஅறிவு, மீட்பு மற்றும் காதலை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் மையக்கரு என்று படக்குழு தெரிவித்துள்ளது.கவுதம் வாசுதேவ் மேனன், தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரோபோ சங்கர், KPY வினோத், பிளாக் பாண்டி, PGS ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.தொழில்நுட்ப குழு விவரம்:ஒளிப்பதிவு – சிவராஜ்படத்தொகுப்பு – அரவிந்த் பி. ஆனந்த்இசை – கார்த்திக் ஹர்ஷாகலை இயக்கம் – சௌரப் கேசவ்தனித்துவமான திரைக்கதைக்கு பெயர் பெற்ற இயக்குநர் மோகன் குருசெல்வா, பொழுதுபோக்கும் உணர்ச்சியும் கலந்த திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.வானுலக கற்பனைக் காட்சிகளும், புவியுலக நிறமிகு காட்சிகளும், ஆன்மீக இசையும், தத்துவம் கலந்த நகைச்சுவையும் இணைந்து, “காட்ஸ்ஜில்லா” இன்றைய இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் விதமாகவும், குடும்பங்கள் ரசிக்கக்கூடிய விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.இந்த பூஜையுடன் முதன்மை படப்பிடிப்பு துவங்கியுள்ளதோடு, “காட்ஸ்ஜில்லா” புராணம், கற்பனை, நவீன காதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் புதுமையான திரை அனுபவமாக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme