Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

அர்ஜுன் தாஸ் திரைத்துறையில் வெற்றி பயணம்

Posted on September 9, 2025

பாம் படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஷிவாத்மிகா ராஜசேகர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் இந்த திரைப்படம் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாகியுள்ளது..
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை இயக்கிய விஷால் வெங்கட் பாம் (BOMB) என்று திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இவர்களுடன், காளி வெங்கட், நாசர், அபிராமி, சிங்கம்புலி, பாலசரவணன், டிஎஸ்கே, பூவையார், சில்வென்ஸ்டன் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்து உள்ளனர்.
இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். ராஜ்குமார் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு பிரசன்னா செய்துள்ளார்.
நடிகர் அர்ஜூன் தாஸ், 2012-இல், பெருமான் என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்தகாரம் படத்தில் நடித்த பின், அர்ஜுன் தாஸ் ரேடியோ ஒன் 94.3 எஃப்எம் உடன் இணைந்து டிரைவ் எனும் வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். மற்றும் ஆக்ஸிஜன் திரைப்படத்தில் (2017) கோபிசந்தின் சகோதரராகவும் நடித்துள்ளார் . அர்ஜூன் தாஸ் கைதி திரைப்படத்தில் “முக்கிய வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து வெள்ளி திரையில் இன்றும் ஜொலிக்கிறார் அர்ஜூன் தாஸ்” கைதி படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இவரது மிடுக்கான குரலுக்கு பெயர் பெற்றவர். மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தார் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் மக்களிடம் வரவேற்பு பெற்றார். மற்றும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்காக குரல் கொடுத்துள்ளார்.

அர்ஜுன் தாஸ் (Arjun Das) தீவிர கமல்ஹாசன் ரசிகர் கமல் நடித்த விக்ரம் மற்றும் (Good Bad Ugly)படத்தில் JAMMY மற்றும் JOHNNY என்ற முக்கிய கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமானதை தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவில் இன்று புகழ் பெற்றார் நாயகனாக அர்ஜுன் தாஸ் (Arjun Das) உச்சத்தில் உள்ளர்.

  • தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும்
  • *இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு நடிகர் உதயா கண்ணீர் அஞ்சலி?
  • முதல் மரியாதைக்குஇறுதி மரியாதை – கவிப்பேரரசு வைரமுத்து பிதாமகனே போய் விட்டாயா???
  • ஆழ்ந்த இரங்கல்களை அனைவருக்கும் தெரிவிக்கிறேன்.- சீனு ராமசாமி.
  • தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (TFAPA) இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் மறைவு – இரங்கல் அறிக்கை
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme