Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ சௌகரியம், மற்றும் நீடித்த உழைப்பு ஆகிய சிறப்பம்சங்களுடன் நான்கு புதிய தயாரிப்பு அணிவரிசைகள் அறிமுகம்

Posted on September 3, 2025

தமிழ்நாடு, ஆகஸ்ட் 29, 2025: வசதியாக படுத்து சிறப்பாக உறங்க உயர்தர மெத்தைகளை வழங்குவதில் இந்தியாவின் புகழ்பெற்ற பிராண்டான பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தமிழ்நாட்டின் சென்னை மாநகர நுகர்வோருக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, தனது சமீபத்திய ஆடம்பர மெத்தைகளின் அணி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் திரு. ஜி. சங்கர் ராம், சென்னையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பெப்ஸ் – ன் பிரத்தியேக விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். உறக்கத்திற்கு உலகத்தரம் வாய்ந்த தீர்வுகளைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த நுகர்வோர்களுக்கு வழங்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் இயங்கும் இந்த பிராண்டின் பயணத்தில் இந்த விற்பனை நிலைய தொடக்கமும், புதிய தயாரிப்புகளின் அறிமுகமும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

புதுமை மற்றும் மதிப்புக்கான அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்ட பெப்ஸ் கம்ஃபோர்ட், பெப்ஸ் சுப்ரீம், பெப்ஸ் ரெஸ்டோனிக் மெமரி ஃபோம் மற்றும் சுப்பீரியர் ஸ்பிரிங் ரேஞ்ச் உள்ளிட்ட நான்கு தயாரிப்பு வரிசைகளை இந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இவை ஒவ்வொன்றும், தரமான உறக்கத்திற்காக மாறிவரும் நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், சௌகரியம், ஆதரவு மற்றும் நீடித்த உழைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிமுகம் குறித்துப் பேசிய பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநர் திரு. ஜி. சங்கர் ராம், “பெப்ஸில், உலகத் தரம் வாய்ந்த உறக்கத் தீர்வுகளை எங்கள் நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கமாக எப்போதும் இருந்து வருகிறது. சென்னையில் எங்களது புதிய தயாரிப்பு அணிவரிசைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், நாங்கள் எங்கள் தயாரிப்புகளது எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், சௌகரியம், நீடித்த உழைப்பு மற்றும் நிலைப்புத்தன்மை ஆகியவற்றில் புதிய தரங்களையும் நிர்ணயிக்கிறோம். இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு மெத்தையும், இன்றைய நுகர்வோரின் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்யும். உலகளவில் மேம்பட்ட நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பிரீமியம் பொருட்களைக் கொண்டு வாடிக்கையாளரின் நலனை குறிக்கோளாக கொண்டு எமது தயாரிப்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாடு மாநிலம் எப்போதுமே எங்களுக்கு எமது வளர்ச்சிக்கான ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது. இப்புதிய தயாரிப்பு அணிவரிசைகளின் அறிமுகம், மக்களின் வாழ்க்கையை உண்மையிலேயே மேம்படுத்தும் தரமான உறக்கத்தை வழங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.” என்று கூறினார்.

பெப்ஸ் கம்ஃபோர்ட், டாடா ஸ்டீலிடமிருந்து பெறப்பட்ட பிரீமியம் தரத்திலான உயர்ந்த கார்பன், உயர்-இழுவிசை கொண்ட எஃகு கம்பியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரமாதமான நீடித்த உழைப்பையும், நீண்ட காலத்திற்கு மெத்தை தொய்வடையாமல் தடுக்கும் திறனையும் உறுதி செய்கிறது. மேம்பட்ட ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த மெத்தை, இஸ்திரி செய்ய செய்யத் தேவையில்லாத பிளாட்-நிட்டிங் பாலியஸ்டர் துணியினால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது 93% மக்கும் தன்மை கொண்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால், இது மீட்சி திறன் கொண்டதாகவும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

இரவு நேரங்களில் தடையில்லாத, சுகமான உறக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட பெப்ஸ் சுப்ரீம், ‘ஜீரோ-டிஸ்டர்பன்ஸ்’ பாக்கெட் ஸ்பிரிங்ஸ்களைக் கொண்டுள்ளது. இது, படுக்கையில் உடன் உறங்குபவரின் அசைவினால் ஏற்படும் தொந்தரவை நீக்குகிறது. உலகின் மிகவும் மேம்பட்ட பாக்கெட் ஸ்பிரிங் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த மெத்தை, நீடித்த உழைப்பு, காற்றோட்டம் மற்றும் சௌகரியத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

பெப்ஸ் ரெஸ்டோனிக் மெமரி ஃபோம் வரிசையில், பெப்ஸ் சானிபெல் பொன்னெல் ப்ளஷ் மெமரி ஃபோம் மற்றும் பெப்ஸ் ஆர்டென் பாக்கெட்டட் ப்ளஷ் மெமரி ஃபோம் என இரண்டு புதிய தயாரிப்புகளின் அறிமுகங்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவின் ரெஸ்டோனிக் கிரேட் ஸ்லீப் சீரிஸின் ஒரு பகுதியான பெப்ஸ் சானிபெல் பொன்னெல் ப்ளஷ் மெமரி ஃபோம், ஒரு ஹைப்ரிட் மெத்தையாகும். இது வெப்பநிலை மற்றும் அழுத்தத்திற்கு ஏற்ப மாறும், காற்றோட்டமான மெமரி ஃபோமை, உயர்ந்த-கார்பன் டாடா ஸ்டீல் பொன்னெல் ஸ்பிரிங்ஸுடன் ஒருங்கிணைத்து, மிகச்சிறந்த சௌகரியத்தை வழங்குகிறது. கூடுதலாக, பெப்ஸ் ஆர்டென் பாக்கெட்டட் ப்ளஷ் மெமரி ஃபோம், மெத்தையில் படுத்திருப்பவர்களினால் ஏற்படும் அசைவுகளை கடத்தாத அல்டிமேட் சொகுசு மெத்தையாக விளங்குகிறது. மேம்பட்ட பாக்கெட் ஸ்பிரிங் தொழில்நுட்பத்தை மென்மையான மெமரி ஃபோமுடன் இணைத்து தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த மெத்தை, இணையற்ற சௌகரியத்தையும், தடையற்ற சுகமான உறக்கத்தையும் வழங்குகிறது.

பெப்ஸ், தமிழ்நாட்டில் 2,500-க்கும் மேற்பட்ட மல்ட்டி-பிராண்ட் விற்பனை நிலையங்கள் மற்றும் சென்னையில் 250 டீலர்கள் உட்பட, விரிவான வினியோக வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. மூலம் மாநிலம் முழுவதும் அதன் தயாரிப்புகள் எளிதாகக் கிடைக்கின்றன. தனது செயல்பாட்டை மேலும் வலுப்படுத்தும் விதமாக, நிறுவனம் தற்போது தமிழ்நாட்டில் 18 பிரத்தியேக விற்பனை நிலையங்களையும் நடத்தி வருகிறது. மேலும் இந்த எண்ணிக்கையை விரைவில் 25 ஆக விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. சென்னையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 750 சதுர அடி பரப்பளவு கொண்ட பிரத்தியேக விற்பனை நிலையம், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஸ்பிரிங், ஃபோம், மற்றும் காயர் மெத்தைகள் முதல், நல்ல உறக்கத்திற்கு உதவும் பலவிதமான உபகரணங்கள் வரையிலான பிராண்டின் முழுமையான தயாரிப்புகளின் தொகுப்பைக் காட்சிப்படுத்துகிறது. இதன் மூலம் நுகர்வோர் தங்களுக்குப் பொருத்தமான தயாரிப்புகளை நேரடியாகப் பார்வையிட்டு,தேர்வு செய்ய முடியும். இந்தியா முழுவதும், தற்போது 77 பிரத்தியேக விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ள பெப்ஸ், மேலும் அதன் சில்லறை வர்த்தக செயல்பாட்டை அதிகரிக்க ஒரு தீவிர விரிவாக்கத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது.

பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் பற்றி

வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் தயாரிப்பு தொழிலகங்களுடன், இந்தியா முழுவதிலும், பெப்ஸ் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களது எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையில் அதன் உயர்தர தயாரிப்புகள் அக்கறையுடன் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. கோயம்புத்தூரில் 11 ஏக்கர் பரப்பளவுள்ள தொழிற்பேட்டையில் இதன் தயாரிப்பு தொழிலகம் அமைந்துள்ளது. இது, நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தியில் நிபுணத்துவம் கொண்ட தொழில் வல்லுநர்களால் நிர்வகிக்கப்படுகிறது. தோற்றம் மற்றும் உணர்விற்காக ‘மார்வெலஸ் மிடில் ஸ்பைன் கார்டு’ மற்றும் உடன் உறங்குபவரின் அசைவினால் தொந்தரவு இல்லாததை உறுதிசெய்ய ஜீரோ டிஸ்டர்பன்ஸ் போன்ற பல தயாரிப்புகளுக்கு இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பெப்ஸ் காப்புரிமை பெற்றுள்ளது. மார்வெலஸ் மிடில் என்பது, உடலின் மூன்றில் ஒரு பங்கு எடையைத் தாங்கும் தனித்துவமான கட்டுமான சிறப்பம்சம், முதுகில் ஏற்படக்கூடிய அழுத்தத்தை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. விஸ்கோ எலாஸ்டிக் ஃபோமுடன் இந்தியாவின் முதல் இன்னர்ஸ்பிரிங் மெத்தை என புகழ்பெற்றிருக்கும் “ஸ்பைன் கார்டு” ‘முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி’ என்ற சிறப்பு அம்சத்தோடு முன்னிலைப்படுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, www.pepsindia.com – ஐ பார்வையிடவும்.

ஊடகத் தொடர்புக்கு: மின்னஞ்சல்: peps@brandcompr.com அல்லது அழைக்கவும்: வினோத் | +91 97411 83199

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme