Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல்

Posted on September 8, 2019

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 144தடை உத்தரவு அமல்!ஆட்சியர் உத்தரவு.

இராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம், கமுதி பசும்பொன்னில் அக்.30ல் தேவர் குரு பூஜை கடைபிடிக்கப்படுகிறது. இந்த இரண்டு நினைவிடங்களுக்கு வந்து செல்லும் வாகனங்களை முறைப்படுத்தல் தொடர்பாக பல்வேறு சமுதாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஆக.29 ஆம் தேதி நடந்தது.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி இரண்டு நிகழ்வுகளிலும் பங்கேற்க வருபவர்கள் வாடகை வாகனங்களில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் பொருட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (செப்.9) முதல் இரண்டு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இதன்படி நாளை (செப்.9) முதல் செப்.15 வரை, அக்.25 முதல் அக். 31 வரை தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இக்கால கட்டத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம் – யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய கமர்ஷியல் விருந்து!*
  • அங்கீகாரம் திரை விமர்சனம்
  • கான்செப்ட் திரை விமர்சனம்
  • தி ஹிடன் புரோடெக்டர் திரை விமர்சனம்
  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme