Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

புதுவை மாநிலம் செக்ஸ் சுற்றுலா பகுதியாக மாறிவருகிறது

Posted on August 31, 2019

ஓட்டலில் அவிழ்த்துப்போட்டு நிர்வாணமா ஆடுறாங்க… செக்ஸ் மாநிலமா மாறிடுச்சு… அதிர வைக்கும் அன்பழகன் எம்.எல்.ஏ..!

ஓட்டல்களில் அரைகுறை நிர்வாண நடனம் நடப்பதாக அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுவை ஓட்டல்களில் அரைகுறை நிர்வாண நடனம் நடப்பதாக அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் அன்பழகன் எம்.எல்.ஏ. இது குறித்து கேள்வி எழுப்பினார். ’புதுவை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தங்குதடையின்றி விற்பனை செய்யப்படுகின்றன. கஞ்சா பழக்கத்திற்கு ஆளாக்கப்பட்ட இளைஞர்கள் பணத்திற்காக கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது. அதை விற்பவர்கள் யார்? என்பது போலீசாருக்கு தெரியும். கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசிடம் என்ன சட்டம் உள்ளது?

கோவா போன்ற பல சுற்றுலா நகரங்களில் கூட குறிப்பிட்ட பகுதியில் ஆண்களும், பெண்களும் அரைகுறை ஆடையுடன் இருக்க அனுமதிக்கப்படுவர். ஆனால் புதுச்சேரியில் அந்த நிலை இல்லை. பொதுமக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளிலும் நகரின் பிரதான சாலைகளிலும் இவர்கள் அரைகுறை கால்சட்டையோடு சுற்றி திரிகின்றனர்.

சுற்றுலாவிற்காக வரும் பயணிகள் அனைத்து தவறுகளையும் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களை மகிழ்விக்க ஓட்டல்களில் அரைகுறை நிர்வாண நடனம் நடத்தப்படுகிறது. ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால் புதுவை மாநிலம் செக்ஸ் சுற்றுலா பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. கலாசார சீரழிவும் ஏற்படுகிறது. அடுத்த தலைமுறை இளைஞர்களை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லும் இதுபோன்ற தவறான செயல்களை அரசு தடுக்க வேண்டாமா? என கூறினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் நாராயணசாமி, ’கஞ்சா, ஆன்லைன் லாட்டரியை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கள்ள லாட்டரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டுக்குள் வந்துள்ளது. ரெயில் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாயிலாக விழுப்புரம் பகுதியில் இருந்து கஞ்சா வருகிறது. லாஸ்பேட்டை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா பிடிபட்டுள்ளது. இதனை விற்க சிறுவர்களையும் பயன்படுத்துகிறார்கள். கஞ்சா விற்பவர்களை பிடிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த ஒரு பெண்மணி இதில் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் திருபுவனை பகுதியிலும் கஞ்சா பிடிபட்டுள்ளது. கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என அவர் தெரிவித்தார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஸ்வநாத் & சன்ஸ்” ரூ.200 கோடியை கடந்தது – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு
  • Varshini karmegham who plays Ramya in Motha Raathiri, comes to cinema with a rather unconventional background. A Physics student from psgr krishnanmma
  • நடிகர் தனுஷ் எனக்கு இன்ஸ்பிரேஷன்”: நடிகை வர்ஷினி!
  • ஜெயராம் – சிம்ரன் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம் காம் திரைப்படம் – கோலாகலமாக நடைபெற்ற பூஜை !
  • Romeo Pictures சார்பில் ராகுல் மற்றும் Aviate Pictures சார்பில் கோகுல் ஸ்ரீனிவாசன் இணைந்து தயாரிக்க புதிய திரைப்படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme