Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
‘லவ்வர் ‘ திரை விமர்சனம்-indiastarsnow.com

‘லவ்வர் ‘ திரை விமர்சனம்

Posted on February 9, 2024

‘லவ்வர் ‘ திரை விமர்சனம்-indiastarsnow.com
‘லவ்வர் ‘ திரை விமர்சனம்-indiastarsnow.com

மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சித்தப்பு சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார் நிகிலா சங்கர், ரிணி, அருணாச்சலேஸ்வரன் நடித்துள்ளனர்.

“‘லவ்வர்’ திரைக்கதை கல்லுரி காதலில் தொடங்கி திருமணத்தில் முடிந்ததா என்பதே புனிதமான காதலின் திரைக்கதை ‘லவ்வர்’”
திரைக்கதையின் நாயகன் அருண் (மணிகண்டன்) தனக்கு பிடித்த வரைகலை வடிவமைப்பாளர் (graphic designer) வேலை தேடுகிறார் மறுபுறம் தனது நண்பன் உதவியுடன் சொந்தமாக ஒரு கஃபே வைக்க வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார். எந்த வேலைக்கும் போகாமல் அம்மாவின் வருமானத்தில் திரியும் நாயகன் அருண் , ஐடியில் பணிபுரியும் திவ்யாவும் (ஸ்ரீகவுரி ப்ரியா) கல்லூரியிலிருந்தே காதலிக்கின்றனர் இருவரின் 6 வருட காதல் கொஞ்சம் கொஞ்சமாக கசக்கத் தொடங்குகிறது அதற்கு கரணம் அருண் (மணிகண்டன்) குடி பழக்கம் ,புகை பழக்கம், கஞ்சா என போதை முக்கியகாரணமாக உள்ளது,நாயகன் அருண் (மணிகண்டன்) திவ்யாக சுதந்திரத்தில் தலையிடுவதாக உணர்கிறார்கள்.ஒரு கட்டத்தில் ஆறாண்டு காதல் முடிவுக்கு வருகிறது .ஆனாலும் அருண் விடுவதாக இல்லை. விளைவு என்ன என்பது தான் ‘லவ்வர்’ திரை படத்தின் கதை காதல் ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும.

‘லவ்வர்’ படத்தின் நாயகியாகி இருக்கும் ஸ்ரீகௌரி பிரியா திரைக்குப் புதியவர் என்றாலும் சிறப்பான நடிப்புத் திறனை வெளிப்படுத்தி திரையில் அணைவரின் கவனத்தை பெறுகிறார் நாயகியாகி ஸ்ரீகௌரி ,மணிகண்டன் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா இருவருமே திரையில் தனது நடிப்பின் மூலம் சொல்ல முடியாத தனது மன நெருக்கடிகளை முகத்தில் பிரதிபலித்து நடிப்பில் போட்டி போட்டு திரையில் நடித்து காதலர்களை திரையில் ரசிக்கவைத்துள்ளார் குறிப்பாக நாயகியிடம் மணிகண்டன் கடைசியாக ஒருவாய்ப்பு கொடு என்று கேட்க “உங்க அம்மாவுக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுப்பியா ” என்ற கேள்விக்கு பிறகு படத்தின் திரை கதை எளிமையான வசனங்கள் மூலம் சிறப்பாக அமைந்துள்ளது இது திரையில் பார்வையாளர்களையும் “தற்கால காதலர்களை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது‘லவ்வர்’ திரைப்படம்”.

‘லவ்வர்’ படத்தில் நண்பர்களாக வருபவர்களும் கூட அவர்களது குணச்சித்திரங்களை அழகாக எதார்த்தமாக வெளிப்படுத்தி உள்ளனர். ‘லவ்வர்’படத்திற்கான ஒளிப்பதிவு செய்துள்ள ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசையமைத்துள்ள ஷான் ரோல்டன் இருவரும் ‘லவ்வர்’ படத்தின் கதையின் அழுத்தமாக ரசிகர்கள் முன் கடத்தி உள்ளனர்.

  • Kauvery Hospital Strengthens Emergency Cardiac Response at Chennai International Airport with Installation of Automated External Defibrillators (AED)
  • சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் உயிர்காக்கும் ஏ.இ.டி கருவிகளை நிறுவி அவசரகால இதய சிகிச்சையை வலுப்படுத்தும் காவேரி மருத்துவமனை!*
  • பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும் அடுத்த திரைப்படம் “மக்கள் காவலன்”  
  • “வல்லமை” திரைப்படத்தை தொடர்ந்து பேட்லர்ஸ் சினிமா சார்பாக மியூசிக்கல் ஹாரராக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது
  • ‘ஜி.டி.என்.’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme