Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
’வடக்குப்பட்டி ராமசாமி’ திரை விமர்சனம்

’வடக்குப்பட்டி ராமசாமி’ திரை விமர்சனம்

Posted on February 3, 2024
’வடக்குப்பட்டி ராமசாமி’ திரை விமர்சனம்
’வடக்குப்பட்டி ராமசாமி’ திரை விமர்சனம்

’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் முழுக்கவே சிரிக்கவும் சிந்திக்கவும் விதமாக உள்ளது குறிப்பாக சந்தானம், மாறன், சேஷு கூட்டணி தவிர்த்து ரவிமரியா, ஜான் விஜய், கூல் சுரேஷ், நிழல்கள் ரவி என ஒவ்வொருவரும் நகைசுவை கதைக்கு கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் சிறப்பாக நடித்து திரையில் ரசிக்கவைத்துள்ளார் குறிப்பாக சந்தானம்,சேஷு,மாறன் கூட்டணி சென்னைக்கு சென்று ராணுவ மேஜரான நிழல்கள் ரவியின் வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் சிறப்பான நகைசுவை .கிராமத்துக்கு வந்து ‘மெட்ராஸ் ஐ’ நோயை பரப்புவதற்காக திட்டமிடுதல் போன்ற காட்சிகள் நல்ல காமெடி விருந்தாக அமைந்துள்ளது இந்த ’வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் .

வடக்குப்பட்டி என்ற கிராமத்தில் தன்னுடைய குடும்ப வறுமையால் சிறுவயதில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் பானை தொழில் செய்யும் ராமசாமி (சந்தானம்). ஊரே காட்டேரி என்று பயந்து துரத்திவர எதிர்பாராத தருணத்தில் தற்செயலாக சந்தானத்தில் பானையால் வீழ்த்தப்படுவதால், கிராம மக்கள் அந்த பானையையே அம்மனாக வழிபட தொடங்குகின்றனர். மக்களின் நம்பிக்கையை மூலதனமாக்கி, அந்த பானையை வைத்து கோயிலை கட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார் ராமசாமிக்கு புதிய பிரச்சனை தொடங்குகிறது திரைப்படத்தின் இரண்டாவது பத்தியில் . வடக்குப்பட்டிக்கு தாசில்தாராக வரும் தமிழ்க்கும் மற்றும் சந்தானத்தின் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிப்பதில் இவர்களுக்கு இடையே நடக்கும் மோதலில் கோயில் சீல் வைக்கப்படுகிறது. கோயில் மீண்டும் திறக்கப்பட்டதா? ‘வடக்குப்பட்டி ராமசாமி’ தனது எதிரிகளை எப்படி எதிர்கொண்டர் ? என்பதை நகைச்சுவையுடன் திரையில் ரசிக்கவைத்துள்ளது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படம் .

கோவிலை திறக்க ராமசாமி என்னவெல்லாம் செய்கிறார் என்பதை திரையில் ரசிக்கும் படியாக திரைக்கதை அமைத்து இயக்குநர் கார்த்திக் யோகி தியேட்டரில் இருப்பவர்களை எல்லாம் சிரிக்க வைத்திருக்கிறார் .

ஷான் ரோல்டனின் பின்னணி இசை திரைப்படத்துக்கு பலம் சேர்த்துள்ளது . தீபக்கின் ஒளிப்பதிவு திரையில் ரசிக்கும்படியாக உள்ளது , சிவனாண்டீஸ்வரனின் எடிட்டிங், ராஜேஷின் கலை இயக்கம் என அனைத்தும் மிக சிறப்பு .

’வடக்குப்பட்டி ராமசாமி’ திரை விமர்சனம்
’வடக்குப்பட்டி ராமசாமி’ திரை விமர்சனம்

  • ராமாயணா திரை விமர்சனம்
  • VELS ORGANISES DIVINE PRAYERS FOR THE SUCCESS OF MOOKUTHI AMMAN 2
  • மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு!
  • Mythri Movie Makers – G Squad presentFilmmaker Vishal Venkat’s Directorial, Starring Regena Cassandra and Nassar, Wraps Up Shooting
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ், ஜி ஸ்குவாட் இணைந்து வழங்கும், இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme