Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2024
  • நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் ‘கருடன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் ‘கருடன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

admin January 20, 2024
Actor Soori’s ‘Garudan’ First Look

Actor Soori’s ‘Garudan’ First Look

*

நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் 'கருடன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் ‘கருடன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் ‘கருடன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது.*

இயக்குநர் R S. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கருடன்’. இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுத, ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பு பணிகளை கையாள, ஜி. துரைராஜ் கலை இயக்க பொறுப்பை ஏற்றிருக்கிறார்.‌ ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சூரி ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் தோற்றமும், வித்தியாசமான உள்ளடக்கத்துடன் கூடிய காணொளியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

சூரி – சசிகுமார் – உன்னி முகுந்தன்- சமுத்திரக்கனி – R S. துரை செந்தில்குமார் என நட்சத்திர பட்டாளங்கள் ஒன்றிணைந்து, ‘கருடன்’ திரைப்படத்தை உருவாக்கி இருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Post navigation

Previous *Actor Soori’s ‘Garudan’ First Look and Glimpse Revealed!
Next இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் DNS படத்திற்கு இசையமைக்கவுள்ளர்.*

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.