Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
“ஷாட் பூட் த்ரீ” திரை விமர்சனம்

“ஷாட் பூட் த்ரீ” திரை விமர்சனம்

Posted on October 8, 2023

“ஷாட் பூட் த்ரீ” திரைக்கதை நான்கு குழந்தைகலின் மன்னிக்கவும் (ஐந்து )குழந்தைகலின் திரைக்கதை “1.கைலாஷ், 2.பல்லவி,3.பல்லு,4.பூவையார்,5.(மேக்ஸ்)” “ஷாட் பூட் த்ரீ” ” ஒரு நாயின் மீது அதீத பாசம் கொண்ட ஒரு சிறுவன் கதை “ஷாட் பூட் த்ரீ”. கைலாஷ் ஒரு நாயை வளர்க்க விரும்புகிறார், ஆனால் அவரது தாயார் அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். கைலாஷ் பிறந்தநாளுக்கு தனது நண்பர்களான பல்லவி மற்றும் பல்லுவின் உதவியுடன் மேக்ஸ் என்ற செல்ல நாயைப் பிறந்தநாள் பரிசாக பெறுகிறார். அம்மாவுக்கு விஷயம் தெரிய வர, முதலில் மறுக்கிறார். பின்னர் கைலாஷ் மேக்ஸ் வளர்க்க சம்மதிக்கிறார். கைலாஷின் அம்மா அப்பா சென்னை அருகில் உள்ள எளிமையானவர்க்ளக்கு தீபாவளி பரிசு கொடுக்க செல்வதால் (மேக்ஸ்) காப்பகத்தில் விட முடிவு சேர்கிறார்கள் அனல் கைலாஷ் தான் கூடவே இருந்துபார்த்துக்கொள்வதாக கேட்க கைலாஷின் அம்மா அப்பா சம்மதம் தெரிவிக்கிறார் . வீட்டில் கைலாஷ் மற்றும் அவனது நண்பர்களான பல்லவி மற்றும் பல்லு மூவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மேக்ஸ் காணாமல் போகிறது. கைலாஷும் அவனது நண்பர்களும் மேக்ஸை தேடி கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். இதனிடையே தெரு நாய்கள் தொல்லைகள் அதிகரித்துள்ளதாக மாநகராட்சிக்கு புகார் வருகிறது. அதனால் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் பிடித்து கொன்று விட மாநகராட்சியின் நாய் வண்டி வலம் வருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது? காணாமல் போன மேக்ஸ் என்ன ஆனது? மேக்ஸ் திரும்ப கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

கலகலப்பான தந்தையாக தந்தை சுவாமிநாதனாக வெங்கட் பிரபு, கறாரான தாயாக சினேகாவும் சிறிது நேரமே திரையில் வந்தாலும் தங்களுக்கான வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளனர் அம்மா சியாமளாவாக சினேகா, , தல குமாராக யோகி பாபு, பூவையார் ரமணனாக, பல்லவியாக ப்ரணிதி, கைலாசமாக கைலாஷ் ஹீட், பல்லுவாக வேதாந்த் வசந்தா, மருத்துவர் சேகராக அருணாசலம் வைத்தியநாதா, பைரவாவாக சாய் தீனா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக நான்கு குழந்தை நட்சத்திரங்களின் இயல்பான நடிப்பு அனைவரின் மனதை நெகிழ வைக்கும். கதையின் நாயகனாக மேக்ஸ் என்கிற நாயின் பங்களிப்பு கூடுதல் சிறப்பு.

ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளர் ராஜேஷ் வைத்தியா இசை மற்றும் பின்னணி இசை, எடிட்டர் பரத் விக்ரமன் ஆகியோரின் கச்சிதமான தொழில்நுட்ப பங்களிப்பு, பெரிய அடுக்குமாடி குடியிருப்பு அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை, சுவாரஸ்யமாக நகர பலமாக அமைந்துள்ளது.

ஷாட் பூட் த்ரீ ஒரு மனதைக் கவரும் கதையைக் கொண்டுள்ளது. பணம் மற்றும் பதவி மட்டுமே முக்கியம் என்று என்னும் மக்கள் ஒரு சில மணிநேரம் தங்கள் குடும்பத்திற்கு ஒதுக்க வேண்டிய முக்கியத்தை சொல்வதுடன், அன்பு, பச்சாதாபம். பாசம் மற்றும் விலங்குகள் பராமரிப்பின் முக்கியத்துவம் போன்ற அம்சங்களை திரைக்கதையாக அமைத்து ஒரு மனதைக் கவரும் கதையைக் படைத்துள்ளார் எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் – அருணாச்சலம் வைத்தியநாதன்.

“ஷாட் பூட் த்ரீ" திரைக்கதை நான்கு குழந்தைகலின் மன்னிக்கவும் (ஐந்து )குழந்தைகலின்  திரைக்கதை
“ஷாட் பூட் த்ரீ” திரைக்கதை நான்கு குழந்தைகலின் மன்னிக்கவும் (ஐந்து )குழந்தைகலின் திரைக்கதை

  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி
  • நகைச்சுவையுடன் வலுவான சமூக கருத்தை முன்வைக்கும் பொழுதுபோக்கு திரைப்படமான ‘நல்லபடம்’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!
  • Nallapadam’ Set to Hit Screens on September 18; A Socio-Commercial Entertainer Blending Humour with a Strong Social Message
  • பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” – ஜிதின் குலாட்டி
  • DAC Developers Launches Balmandaisa
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme