ஆர் யூ ஓகே பேபி திரை விமர்சனம்
திரையில் முதல் கட்சி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள வீடை காட்டுகின்றனர் அதில் தன் மனைவி வித்யா (அபிராமி), அம்மா (கலையரசி) மற்றும் கை குழந்தையாக இருக்கும் மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் தொழிலதிபரான பாலன் (சமுத்திரக்கனி) நடித்துள்ளார் ‘சொல்லாததும் உண்மை’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து தொகுப்பாளர் ராஷ்மி ராமகிருஷ்ணனிடமிருந்து (லட்சுமி ராமகிருஷ்ணன்) வித்யாவிற்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. ஷோபாவின் (முல்லை அரசி) குழந்தையைச் சட்டத்திற்குப் புறம்பாக ‘தத்தெடுத்தல்’ என்ற பெயரில் கடத்தி வைத்திருப்பதாக வித்யா மேல் குற்றச்சாட்டை வைக்கிறார் ராஷ்மி ராமகிருஷ்ணன். பதறும் வித்யா அதை மறுக்கிற மற்றும் அதுபற்றி தனது கணவரிடம் விரிவாக தெரிந்துகொள்ளுபடி அபிராமி (வித்யா) ராஷ்மி ராமகிருஷ்ணன் இடம் கூறுகிறார்
அசோக், முல்லையரசி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிறார்கள். இதில் கர்ப்பமாகும் முல்லையரசி குழந்தையை பெற்று எடுத்து, குழந்தை இல்லாத தம்பதியான சமுத்திரக்கனி, அபிராமிக்கு(காசுக்கு விற்றுவிடுகின்ற்றனர்) “தத்து கொடுத்து விடுகிறார்”.
திரையில் தனது கதாபாத்திரத்துக்கு அனைத்து நடிகர்களும் உணர்வுபூர்வமாக கதைக்கு உயிர்கொடுத்துள்ளார் (இசை ,ஒளிப்பதிவு ) சமுத்திரக்கனியும் அபிராமியும் முல்லை அரசிதான். தனியாளாகப் பல காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறார். ராஷ்மி ராமகிருஷ்ணன் (லட்சுமி ராமகிருஷ்ணன்). தொடக்கத்தில் இருந்து திரையை ஆக்கிரமித்து சிந்திக்கவைக்கிறது இந்த திரைக்கதை .
“சொல்லாததும் உண்மை” நிகழ்ச்சி இயக்குநராக வரும் பாவெல் நவகீதன் சில காட்சிகள் வந்தாலும் தன் நடிப்பால் தனித்து நிற்கிறார். வினோதினி வைத்தியநாதன், கலையரசி, அனுபமா குமார், விஜே ஆஷிக், ஆடுகளம் நரேன், ரோபோ ஷங்கர், ‘முருகா’ அசோக், உதய் மகேஷ் எனத் துணை கதாபாத்திரங்கள் இயக்குநர் மிஷ்கினும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளார் .