Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பாட்னர் திரை விமர்சனம்

பாட்னர் திரை விமர்சனம்

Posted on August 26, 2023

சொந்த தொழில் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் கடன் வாங்கி இறால் பண்ணை வைக்கும் ஹீரோ (ஆதி), நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையில் மாட்டுகிறார். ‘கடனை கட்டு; இல்லைனா உன் தங்கச்சியைக் கட்டிக்கொடு’ எனக் கடன் கொடுத்தவர் கேட்க, பணம் சம்பாதிக்க வழக்கம்போல சென்னைக்குப் புறப்பட்டு வருகிறார் ஆதி. சென்னையில் மாடர்ன் திருடனாக இருக்கும் தனது நண்பர் யோகி பாபுவுடன் சேர்ந்து திருட்டு தொழிலில் பாட்னராகினார். சில பல திருட்டுகளை சக்சஸாக முடித்த பின்னர் வில்லன் ஜான் விஜய்யிடம் இருந்து ஒரு அசைன்மென்ட் வருகிறது. விஞ்ஞானியாக இருக்கும் ஆர்.பாண்டியராஜனின் லேப்பில் இருக்கும் முக்கியமான ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட சிப் ஒன்றைத் திருடுவதற்காகச் செல்கிறது இந்தக் கூட்டணி. அங்கு நடந்த பிரச்சனையில் தவறுதலாக யோகி பாபு ஊசி, ஹன்சிகாவாக மாறிவிடுகிறார். அவரை மீண்டும் யோகி பாபுவாக மாற்றுவதற்காக பாண்டியராஜனை தேடிப் போக, அவர் அங்கிருந்து எஸ்கேப்பாகி விடுகிறார். இதனால், பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் இருவரும் அவற்றை எப்படி சமாளித்தார்கள், மீண்டும் ஹன்சிகா யோகி பாபுவாக மாறினாரா, இல்லையா, என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘பார்ட்னர்’ படத்தின் கதை.

எழுதி இயக்கியிருக்கும் மனோஜ் தாமோதரன், மிகப்பெரிய நட்சத்திர கூட்டத்தை வைத்துக்கொண்டு ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்கவைத்துள்ளார்
ரோபோ சங்கர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, ‘டெம்பிள் மங்கீஸ்’ அகஸ்டின், வில்லனாக வரும் ஜான் விஜய், விஞ்ஞானியாக வரும் ஆர்.பாண்டியராஜன், ஆதியின் காதலியாக வரும் பல்லக் லல்வானி, யோகி பாபுவின் காதலியாக வரும் ‘மைனா’ நந்தினி, ஹெச்.ஆராக வரும் முனிஷ்காந்த், அமைச்சர் அக்னி குஞ்சாக வரும் ரவி மரியா என திரையில் முழுக்க முழுக்க நகைசுவை விருந்து படைத்துள்ளார்.

ஒரு ஆண் பெண்ணாக மாறியானால் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வார்? என்பதை அழுத்தமாக பதிவு செய்ய தவறியிருக்கும் இயக்குநர் மனோஜ் தமோதரன், சமூகத்தில் பெண்கள் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை ஜாலியாக சொல்லி கடந்து போனாலும் அந்த காட்சி பாராட்டும்படி இருக்கிறது.முழுக்க முழுக்க நகைச்சுவையை மட்டுமே மையப்படுத்தி கதை நகர்வதால், லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால் நிச்சயம் ரசிகர்கள் மகிழ்ச்சியாக திரும்பலாம்.

  • இளைய திலகம் பிரபு நடிக்கும் நகைச்சுவை படம் “அழகிய லைலா” படபிடிப்புடன் தொடங்கியது.
  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • 33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் – பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.
  • நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்- Cold Call’ படத்தின் முன்னோட்டம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme