அடியே திரை விமர்சனம்
நாயகன் ஜீவா தன் அப்பா அம்மா விபத்தில் இறந்துபோகிறார்கள் அதனால் குடும்ப கடனுக்காக சொத்துக்கள் அனைத்தும் இயந்துவிடுகிறார் ஜீவா தனது நண்பர்களின் உதவியுடன் வாய்ந்துவருகிறார் அப்போது வாழ்க்கையை வெறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கும் நாயகன் ஜீவா (ஜி.வி.பிரகாஷ் குமார்) தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கிறார். அந்த நேரத்தில் பிரபல பின்னணி பாடகராக இருக்கும் அவரது பள்ளிப் பருவத்துக் காதலியான செந்தாழினியின் (கௌரி ஜி.கிஷன்) பேட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதில் அவர் தனக்குப் பள்ளிப் பருவத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம் குறித்து நினைவுகூர்கிறார். அதை எழுதியவரைத் தேடி வருவதாகவும் சொல்கிறார். ஜீவாதான் அதை எழுதியது என்பதால் அவர் அதை செந்தாழினிக்குத் தெரியப்படுத்த முயற்சிகள் எடுக்கிறார். அந்த நேரத்தில் நாயகன் ஜீவா ஒரு விபத்தில் மாட்டிக்கொள்ள, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். கண் விழித்துப் பார்த்தால் வேறு உலகத்தில் இருக்கிறார். அந்த உலகத்தில் கவுரியும், ஜிவியும் தம்பதியர்களாக வாழ்கின்றனர்.
அறிவியல் கதையை காதல் கதையோடு சேர்த்து சிறப்பாக திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், அதை எந்தவித குழப்பமும் இன்றி மக்களுக்கு புரியும்படி டைம் டிராவல், டைம் லூப் போன்ற திரைப்பட வரிசையில் பேர்லல் யூனிவர்ஸ் என்ற அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த (காமெடி ,நட்பு ,காதல் )கதையாகவும் திரையில் ராசிக்கவைத்துள்ள படம் தன் ‘அடியே’ .
திரைக்கதை புரியவைக்க இயக்குனர் எடுத்த முயற்சி மிகவும் சிறப்பு “தமிழ் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்டு ‘தமிழ் திணிப்புக்கு’ பிரதமர் விஜயகாந்த் எதிர்ப்பு” தனுஷ் ரசிகராக வரும் ‘கூல்’ சுரேஷ், பிரபு தேவா, ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரம்,தெலுங்கு இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன், இந்திய கிரிக்கெட் அணியின் கோச் மணிரத்னம், ‘அலைபாயுதே’ பட லவ் புரபோசல் காட்சி,”விஜய்யின் ‘போகன்’ பட காட்சி, இசையமைப்பாளர்களான பயில்வான் ரங்கநாதன்”காட்சிகள் ரசிக்க சிரிக்க உத்தரவாதம் அளிக்கிறது.கோகுல் பினோய் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.