தமிழ்நாட்டின் மாவட்டங்களில் நடந்தவை
பெரம்பலூர் மணிப்பூர் மாநிலத்தில் சமீபத்தில் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு வீதியில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ஈரோடு கடம்பூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களை சேதப்படுத்திய கட்டையன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
மக்களின் புகாரை அடுத்து அங்குவந்த வனத்துறையினர் 4 முறை மயக்க ஊசி செலுத்தி கட்டையனை பிடித்தனர்.
அது தற்போது பத்திரமாக மங்கலப்பட்டி வனப்பகுதிக்குள் விடப்பட்டிருப்பதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் பாஜக அரசின் சாதனை குறித்து துண்டு பிரசுரங்களை வழங்க வந்த பாஜகவின் தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம்யை கண்டித்து, 100க்கும் மேற்பட்டோர் “துரோகியே வெளியபோ” என்று கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு, வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே கன்றுக்குட்டியை கொன்ற சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 5 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது
விழுப்புரம்: திமுக தலைவர்கள் பற்றி அவதூறு கருத்து பரப்பியதாக பாஜக தெற்கு மாவட்ட தலைவர் விஏடி கலியவரதன் கைது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்காக கைது.
திண்டுக்கல் மாவட்டம்
பழனி தாலுகா அலுவலகம் அருகே உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. உடைக்க முடியாததால் 6 லட்சம் மதிப்பிலான பணம் தப்பியது. ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்க முயற்சி செய்த தென்காசியை சேர்ந்த சூர்யா என்பவன் 2 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை அரக்கோணம் அருகே கயினூர் கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த 3டன் குட்கா பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. குடோனில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த லட்சுமி காந்த் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மணிப்பூரில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பாக மணிப்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம்.
மணிப்பூர் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தல்.
*மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் மாணவர்கள் கோஷம்.
கைகளில் பதாகைகளை ஏந்தியபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மாணவர்கள்
சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
பிளாட்பார்ம்-1ல் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்
மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் தீவிர சோதனை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஸ்ரீ வெங்கடேசபுரம் கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முகாம் இன்று ஸ்ரீ வெங்கடேசபுரம் சமுதாய நலக்கூடத்தில் தொடங்கியது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு முதியோர் இல்லங்கள் அமைக்க உத்தரவிடக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
யாருடனும் கூட்டணியில் இல்லாததால், டெல்லி NDA கூட்டத்திற்கு அழைக்கவில்லை;
தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார்;
கூட்டணியில் பெயர் மட்டுமே மாறியுள்ளது, மக்களின் நிலை மாறவில்லை;
‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் தலைவர்களுக்குள் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன”
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்
காஞ்சிபுரம் காந்தி ரோட்டில் பிரபல ஜவுளி நிறுவனமான பிரகாஷ்ஷா மற்றும் பாபுஷா போன்ற கடைகளில் கைத்தறி நெசவு சேலைகள் இல்லை, விசைத்தறி சேலைகள் விற்பனை செய்து வருவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
விசைத்தறி சேலையை கைத்தறி சேலை என லேபிள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்துள்ளனர்..
விசாரணை நடக்கிறது
__________
விழுப்புரம்
நீதிமன்ற வளாகங்களில் அம்பேத்கர் படத்தை வைக்க அனுமதிக்க வலியுறுத்தி வக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
__________
வேலூர் ஆம்பூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அம்பேத்கர் நீதிமன்றத்தில் வைக்க கோரினர்.
__________
நெல்லை திசையன்விளை அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்டாரா என போலீஸ் விசாரணை. அப்புவிளை சுவாமிதாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் முத்தையா உடலில் கத்திக்குத்து காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை முத்தையா காதலித்த நிலையில் பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முத்தையா உடலை கைப்பற்றிய போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.
__________
தஞ்சாவூர் ஆட்சியரக வளாகத்தில் கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் கூலித் தொழிலாளி குடும்ப பிரச்னை காரணமாக திங்கள்கிழமை தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
__________
ஈரோடு மாவட்டம் கொங்கார்பாளையத்தில் சிறுத்தை நடமாட்டம் உறுதியானதால் மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கொங்கார்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வரவேண்டாம். கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்து கொன்றதை வனத்துறை கேமராவில் பதிவான நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
__________
விழுப்புரம் கெடார் அருகே ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது.
கெடார் அருகே அரியலூர் திருக்கை வி.ஏ.ஓ. சங்கீதா ரூ.1,000 லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டார். இறப்பு சான்று வழங்க ரூ.1,000 லஞ்சம் வாங்கியபோது சங்கீதாவை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
__________
திருவள்ளூர் பொன்னேரியில் இன்று அண்ணா சிலை அருகில் திமுக மாவட்ட மகளிர் அணி சார்பில் மாவட்ட கழக செயலாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் தலைமையில்
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரம் மற்றும் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்தி மானபங்கப்படுத்தியதை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
__________
சென்னையில் கேகே நகர், போரூர், மாங்காடு, ஈக்காட்டுத்தாங்கல்
வேளச்சேரி, நங்கநல்லூர், ஆலந்தூர், வடபழனி, கோயம்பேடு, அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.
இதேபோன்று சென்னை புறநகர்ப் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, மணலி, பூவிருந்தவல்லி, திருமழிசை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. .
__________
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்! திருச்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இடம் வழங்கிய பொது மக்களுக்கு குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்
__________
வேலூர் பீஞ்சமந்தையில் ரூ.15.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய தார்ச்சாலை திறப்பு. தங்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறியதாக பொதுமக்கள் மகிழ்ச்சி
__________
விருதுநகர் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தில் தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து. தீயை அணைக்கும் பணியில்தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு கட்டுப்படுதினர்.
__________
நீலகிரி கோத்தகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
__________
கோவை
சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
__________
சேலம் ஆத்தூரில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீதிமன்றத்தில் சட்டமேதை அம்பேத்கர் படத்தை வைக்க வலிலுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.