Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • வீரன் திரை விமர்சனம்

வீரன் திரை விமர்சனம்

admin June 3, 2023
வீரன்’ திரைப்பட விமர்சனம்

வீரன்’ திரைப்பட விமர்சனம்

வீரனூரில் வாழ்ந்து வரும் கதாநாயகன் குமரன் (ஹிப் ஹாப் ஆதி) தனது சிறு வயதில் மின்னல் தாக்கப்பட்டு சுய நினைவை இழக்கிறார் குமரன் . உடனடியாக ஆதியை மருத்துவமனையில் அனுமதிக்கினர். மருத்துவர்களின் சிகிச்சையில் இருக்கும் ஆதி எப்போது வேண்டுமானாலும் சுய நினைவுக்கு வரலாம் என மருத்துவர் கூறிவிடுகிறார் இதனால், வீரனூரில் இருந்து தனது தம்பியை சிங்கப்பூருக்கு ஆதியின் அக்கா அழைத்து சென்று விடுகிறார். சிங்கப்பூருக்கு செல்லும் ஆதிக்கு சில நாட்கள் கழித்து நினைவு திரும்புகிறது. நாட்கள் செல்ல செல்ல தனக்குள் மின்னல் சக்தி இருப்பதை ஆதி உணருகிறார்.
அதுமட்டுமின்றி தன்னால் வேறொருவரின் மூளையை கூட கட்டுப்படுத்த முடியும் என்பதை அறிந்து கொள்கிறார். இதற்கிடையே, ஆதி தனது வீரனூர் கிராமத்துக்கு ஆபத்து ஏற்படுவது போல் கனவு காண்கிறார். 14 வருடங்கள் கழித்து சிங்கப்பூரில் இருந்து வீரனூர் கிராமத்துக்கு வரும் ஆதிக்கு, லண்டனை சேர்ந்த விஞ்ஞானி வினய், வீரனூர் கிராமத்தில் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பயங்கரமான திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கும் விஷயம் தெரிய வருகிறது.வர இருக்கும் ஆபத்து பற்றி சொன்னாலும் புரிந்துக்கொள்ளாத மக்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் சூப்பர் ஹீரோ(வீரன்) ஆதி, அதை எப்படி செய்கிறார்? என்பது தான் ‘வீரன்’ படத்தின் மீதிக்கதை.

உலக திரையில் சூப்பர் ஹீரோக்களின் படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. அனல் ” வீரன் ” உலக சூப்பர் ஹீரோக்கள் போல் இல்லாமல், “குயந்தைகளுக்கு பிடித்த நிஜ ஹீரோவாக வெள்ளித்திரையிலும் ஜொலிக்கிறார் வீரன்” .

ஹீரோவாக சில படங்களில் வெற்றி பெற்ற ஆதி, சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்தாலும், லாஜிக் மீறாமல் திரையில் மேஜிக் செய்துள்ளார். ஹீரோ குழந்தைத்தனமான முகமும், நடிப்பும் குமரன் கதாபாத்திரத்திற்கு உயிர் கடுத்துஉள்ளது , “வீரன்” என்ற சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்த பிறகும் அவர் வெறும் ஹீரோவை போல் வழக்கமான சண்டைக்காட்சிகளில் நடித்திருப்பது திரையில் குழந்தைகல் ரசிக்கும் வகைளில் “வீரன்” வில்லனாக நடித்திருக்கும் வினய், ஆதியின் நண்பராக நடித்திருக்கும் யூடியூபர் சசி, முனிஷ்காந்த், காளி வெங்கட் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக காட்டியிருப்பதோடு, சூப்பர் ஹீரோ வீரன் வரும் காட்சிகளை இயல்பாகவும், நம்பகத்தன்மையோடும் படமாக்கியிக்கிறது.ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகமாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
‘மரகத நாணயம்’ படம் மூலம் நகைச்சுவை உணர்வுள்ள இயக்குநர் என்று பெயர் வாங்கிய இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண், இந்த படத்தில் அதே நகைச்சுவையை கொஞ்சம் ஆக்‌ஷன் கலந்து கொடுத்துஉலர் சூப்பர் ஹீரோ ஜானர் படம் என்றாலும் குயந்தைகளுக்கு புரிய வேண்டும் என்பதற்காக வீரன் கதாபாத்திரத்தை எளிமையாக வடிவமைத்திருக்கும் இயக்குநர், அதற்கான கதை மற்றும் காட்சிகளையும் மிக எளிமையாகவே உள்ளதால் திரையில் ரசிக்கவைக்கிறது .

ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர், சூப்பர் ஹீரோ படத்தை வழக்கமான பாணியில் சொல்லாமல், சாதாரண முறையில் அனைத்து தரப்பினருக்கும் சென்றடையும் வகையில் சொல்லியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.

இந்த “வீரன்” “குயந்தைகளுக்கு பிடித்த நிஜ ஹீரோவாக வெள்ளித்திரையிலும் ஜொலிக்கிறார் வீரன்”…

Post navigation

Previous துரிதம் திரை விமர்சனம்
Next காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரை விமர்சனம்

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*
  • News

பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே “மீசைய முறுக்கு-2” படத்தின் இரண்டாவது சிங்கிள் “பப்பாளி பழமே” பாடல் வெளியானது.*

April 16, 2026
Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 
  • News

Pappaali Pazhamey second single from Meesaya Murukku 2 strikes a chord yet again* 

April 16, 2026
*Yeri Vanthom Ayyappa 1st single from Yogi Babu’s next release Sannidhanam (P.O), strikes a spiritual chord*
  • News

*Yeri Vanthom Ayyappa 1st single from Yogi Babu’s next release Sannidhanam (P.O), strikes a spiritual chord*

April 16, 2026
யோகி பாபுவின் சன்னிதானம் பிஓ படம்! வெளியானது ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்!*
  • News

யோகி பாபுவின் சன்னிதானம் பிஓ படம்! வெளியானது ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்!*

April 16, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.