Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்

Posted on June 2, 2019

புதுச்சேரி:
புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இதையடுத்து அந்த பதவி காலியாக உள்ளது. இதையடுத்து, சட்டசபை நாளை காலை 9.30 மணிக்கு கூட்டப்படுவதாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் நேற்று அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர்கள் பங்கேற்றுள்ளனர். துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டார். எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் சிவக்கொழுந்து ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். லாசுப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான சிவக்கொழுந்து இதற்கு முன் துணை சபாநாயராக இருந்தார். நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!*
  • *பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது*
  • பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில், கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்!*
  • தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • பேட்டில் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme