Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்

Posted on June 2, 2019

புதுச்சேரி:
புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டார். புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இதையடுத்து அந்த பதவி காலியாக உள்ளது. இதையடுத்து, சட்டசபை நாளை காலை 9.30 மணிக்கு கூட்டப்படுவதாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் நேற்று அறிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர்கள் பங்கேற்றுள்ளனர். துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து தேர்வு செய்யப்பட்டார். எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் சிவக்கொழுந்து ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். லாசுப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வான சிவக்கொழுந்து இதற்கு முன் துணை சபாநாயராக இருந்தார். நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்*
  • கருப்பு – திரை விமர்சனம்
  • சட்டென்று மாறுது வானிலை – திரை விமர்சனம்
  • KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது
  • ‘எக்ஸாம்’ அமேசான் பிரைம் வீடியோவில்இணை தொடரில் விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme