Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
குட் நைட் – திரைப்பட விமர்சனம்

குட் நைட் – திரைப்பட விமர்சனம்

Posted on May 12, 2023

‘விக்ரம் வேதா’ ‘ ஜெய் பீம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக (மோட்டார் மோகன்) நடித்து இன்று (12-05-2023) வெளியாகும் ‘குட் நைட்’ திரைப்படத்தில் மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், உமா ராமசந்திரன், ரேச்சல் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “குட் நைட்”. இப்படி ஒரு அழகான குடும்ப கதையை எழுதியது மட்டுமல்லாமல் அதனை இதயத்துக்கு நெருக்கமாக வரும் விதத்தில் வெள்ளித்திரையில் ஜொலிக்கவைத்ததற்கு முதலில் விநாயக் சந்திரசேகரனுக்கு பாராட்டுகள். தான் எழுதிய ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் நடிகர்களை அவர் தேர்வு செய்ததிலேயே இயக்குனர் முழுமையாக ஜெயித்து விட்டார்.

ஐடி நிறுவனமொன்றில் பணியாற்றும் கதாநாயகன் (மோட்டார்) மோகனுக்கு தூங்கும் போது விடும் குறட்டை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அந்தக் குறட்டையால் குடும்பம், நண்பர்கள், அலுவலம் நண்பர்கள் உள்ளிட்ட பல இடங்களில் அவமானப்படும் அவனை ஒரு கட்டத்தில் அதனை காரணம் காட்டி காதலியும் கைவிட்டு சென்று விடுகிறாள். கதாநாயகன் (மோட்டார்) மோகன் தன் தாய், தங்கை அக்கா ஆகியோருடன் வசித்து வருகிறார். அக்காவுக்கு மணமாகிவிட்டாலும், தன் கணவர் ரமேஷ் திலக்குடன் அம்மா வீட்டிலேயே வசிக்கிறார் மணிகண்டன் அக்கா.

மணிகண்டனின் மிகப்பெரிய பிரச்சனையே தூங்கும்போது அவர் விடும் குறட்டை சத்தம்தான். அவர் விடும் குறட்டை சத்தம் பக்கத்து வீடு எதிர்வீடு வரை கேட்கும்.
மோகன் என்ற பெயர் கொண்ட அவரைஅலுவலக நண்பர்கள் மோட்டார் மோகன் என்று அழைக்கும் அளவுக்கு அவரது குறட்டை பிரபலமாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் .

அலுவலக்த்தில் உடன் பணியாற்றும் தோழியிடம் ப்ரபோஸ் பண்ண நினைக்கும்போது, ஒரு பஸ் பயணத்தில் தூங்கும் மணிகண்டன் விடும் குறட்டையைப் பார்த்து “ஒரு சின்ன பஸ் பயணத்திலேயே உங்கள் குறட்டையை என்னால் சகிக்க முடியவில்லை, வாழ்க்கை முழுக்க உங்களுடன் சேர்ந்து எப்படி பயணிப்பது?” என்று சொல்லி விலகி விடுகிறார்.

கதாநாயகன் மோட்டார் மோகன் (மணிகண்டன்). அவரது”மாமா” வரும் ரமேஷ் திலக் காமெடியில் ஒரு பக்கம் அவர் கலக்கினாலும், குடும்பத்தை அரவணைத்துக்கொண்டு செல்வதிலும், மனைவி ரேச்சலிடம் அடங்கிப்போகும் இடத்திலும் இப்படி ஒரு மாமா நமக்கில்லையே என்ற உணர்வை கொடுத்து விடுகிறார்.ரமேஷ் திலக் – ரேச்சல் கெமிஸ்ட்ரி படத்தில் பக்காவாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. நாயகி மீதா ரகுநாத் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்,கறாரான பாஸாக நடித்திருக்கும் பக்ஸ் நடிப்பு வழக்கம் போல் சிறப்பு.

ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பலம். இவரது பின்னணி இசை, கதையோடு நம்மை பயணம் புரிய வைத்திருக்கிறது. ஜெயந்த் சேதுமாதவனின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகூற கொடுத்திருக்கிறது.”குட் நைட்” படத்தின் கதாநாயகன் மோட்டார் மோகனை மட்டும் சுற்றி கதை இல்லாமல் வசனங்களும் நடிப்புப்பு உச்சக்கட்டம் , ரமேஷ் திலக் – ரேச்சல் பாத்திரங்களுக்கும் ஒரு தேவையை உருவாக்கி அதை பிரதான பாத்திரத்தோடு இணைத்த விதம் சிறப்பாக உள்ளது. படத்தின் பெரும்பலமாக வசனங்களும் நடிப்பும் அமைந்துள்ளன. தூக்கம் என்பது மேலதிக விடுதலை உணர்வு, அதன் லயத்தில் மனிதன் கண்டுண்டு கிடக்கும் போது சிலவற்றைக் கவனிக்க இயலாது. அதைப் பெருங்குறையாகப் பார்ப்பதை விட, அந்தக் குறைகளை ஏற்றுக் கொண்டு வாழ்வதே சிறப்பு என்ற திரைக்கதைதான் “குட் நைட்” படத்தின் வெற்றியின் உச்சம்.

குடும்பத்தோடு இந்த வாரம் திரையரங்குக்கு சென்று கொண்டாடும் படமாக “குட் நைட்” வெள்ளித்திரையில் ஜோலிக்கிறது……….

  • SAMANTHA RUTH PRABHU MOVED TO TEARS AS CELEBRITY MASTERCHEF TAMIL CONTESTANTS SURPRISE HER WITH HEARTFELT GIFTS AND MEMORIES!
  • சாமந்தாவைக் கண்கலங்க வைத்த போட்டியாளர்கள்… அன்புப் பரிசுகளால் நெகிழ வைத்த ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப் தமிழ்’ !
  • சீன் திரை விமர்சனம்
  • மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்
  • ராமாயணா திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme