Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
விருபக்ஷா படத்தின் விமர்சனம்

விருபக்ஷா படத்தின் விமர்சனம்

Posted on May 5, 2023

நடிகர்கள் : சாய்தரம் தேஜ், சம்யுக்தா உள்ளிட்டோர்..
இயக்கம்: கார்த்திக் வர்மா
இசை: அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு : சம்ஹத் சைனுதீன்

சாய்தரம் தேஜ் வின் 15 வது படம் விருபக்ஷா என்பதும், 1979 ல் படம் தொடங்குகிறது. ஒரு மந்திர வாதி ஒரு சிறுமியின் சடலத்தை வைத்து தன் வீட்டில் சில சடங்குகளை செய்கிறார். இதை பார்க்கும் ஊர் மக்கள் அந்த மந்திர வாதியை தவறானவர் என்று எண்ணி மந்திரவாதியையும், இவரது மனைவியையும் உயிரோடு மரத்தில் கட்டி கொளுத்தி விடுகிறார்கள். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்பு 1991 ல் அந்த கிராமத்தில் துர்மரணங்கள் நிகழ்கிறது. ஊர் கோவில் பூசாரி ஊரை விட்டு மக்கள் வெளியில் செல்லக் கூடாது என்று தடை விதிக்கிறார். இருப்பினும் சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் இதற்கு காரணம் கண்கள் மூலம் செய்யும் வசியம் என்று கண்டுபிடிக்கிறார் நம் ஹீரோ. இதற்கான காரணங்களும், இந்த கொலை, தற்கொலைகளை முறியடிக்கும் முயற்சிதான் கதையின் மையமாக உள்ளது. அதர்வண வேதத்தில் உள்ள தாந்த்ரீக விஷயங்களை எடுத்து நமக்கு புரியும் படியாக சொல்லி உள்ளார் டைரக்டர்.
படம் தொடங்கி முடியும் வரை சீட் நுனியில் உட்கார வைத்து விடுகிறார். பல ட்விஸ்ட்களை வைத்து அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைக்கிறார் டைரக்டர். சமஹத் சாய்நூதின் ஒளிப்பதிவு இன்னோரு ஹீரோ என்று சொல்லலாம்.
அஜனீஸ் லோக் நாத்தின் பின்னணி இசை காட்சிகளில் பயத்தை கூட்டுகிறது. காதல், சம்யுக்தா முதல் பாதியில் அப்பாவி பெண்ணாகவும், இரண்டாவது பாதியில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு நடிப்பு ராட்சசியாகவும் பிரமாதப்படுத்தி உள்ளார். ஊர் தலைவராக வரும் ராஜீவ் கனக்கலா, டாக்டராக வரும் பிரம்மாஜி, அகோரியாக வரும் அஜய், சுனில், பூசாரியாக வரும் சாய் சந்த், பைரவாவாக வரும் ரவிகிருஷ்ணா என அனைவரும் கச்சிதமாக நடித்து கேரக்டர்களின் மீதான ஆர்வத்தை தக்க வைத்துள்ளார்கள்.. ஹீரோ சாய் தரம் தேஜ் சரியான தேர்வு. இந்த படம் திரையரங்கில் பார்த்தால் ஒரு வித்தியாசமான காட்சி அனுபவத்தை பெறுவீர்கள்.

  • திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ முதல் பார்வை !!
  • Prashanth Fertility Launches ‘Prashanth Fertility at Home’ to Strengthen Continuity of IVF Care and Support Better Treatment Outcomes
  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme