Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தீர்க்கதரிசி படத்தின் விமர்சனம்

தீர்க்கதரிசி படத்தின் விமர்சனம்

Posted on May 5, 2023

இரட்டை குழல் துப்பாக்கியாக இரண்டு இயக்குநர்கள் பி.ஜி.மோகன்- எல்.ஆர்.சுந்தரபாண்டி இணைந்து இயக்கி இருக்கும் படம் தீர்க்கதரிசி படத்தில் நடிகர்கள் சத்யராஜ், அஜ்மல், ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த், ஸ்ரீமன், தேவதர்ஷினி, பூர்ணிமா பாக்யராஜ், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அந்த கியாக த்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
க்ரைம் த்ரில்லருக்கு ஏற்ற கதை தீர்க்கதரிசி. பொதுவாக இப்படிப்பட்ட கதைகளில் எப்படி அந்த கதையின் முடிச்சு அவிழ்க்கப்படுகிறது என்பதில் தான் சுவாரஸ்யம் உள்ளது. முதல் பாதி எந்த அளவுக்கு வசனங்களும் நடிப்புப்பு விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதி விறுவிறுப்பின் உச்சக்கட்டம் என்று சொல்லலாம் மீதமுள்ள நேரங்கள் கொலைகளும், போலீஸ் விசாரணையும் தான் வந்து கொண்டிருப்பது விறுவிறுப்பை ஏற்படுத்துகிறது.

அஜ்மல் கடமைமிக்க காவல்துறை அதிகாரியாக வந்து கிளைமேக்ஸில் வேறொரு முகத்தை காட்டும் அஜ்மலின் கேரக்டர் சற்று எதிர்பாராத விதமாக உள்ளது. சத்யராஜ் எண்ட்ரீ கொடுக்கும் கடைசி 20 நிமிடங்கள் விறுவிறுப்பின் உச்சக்கட்டம் ஏற்றல் மிகையாகாது, தனி ஆளாக கதையின் ட்விஸ்டை வெளிக்கொணரும் ஸ்ரீமன், ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த் என படத்தின் மெயின் கேரக்டர்கள் கவனிக்க வைக்கின்றனர். ஹீரோயினே இல்லாத படம் என்பது கடைசி வரை தெரியாமல் கதையை கொண்டு சென்றுள்ளது இயக்குநர்கள்(2) பணி கவனிக்கத்தகுந்தது.

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பெண் ஒருவர் உயிரிழக்கப்போவதாக மர்ம நபரிடமிருந்து அழைப்பு வருகிறது. அதனை பிராங்க் கால் என போலீசார் நினைக்கும் நிலையில் நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் நடக்கிறது. உடனடியாக விசாரணை அதிகாரிகளாக ஜெயதுஷ்யந்த், ஜெய்வந்த் நியமிக்கப்பட, அடுத்ததாக ஒரு விபத்து நிகழ்கிறது. இதனால் வழக்கு போலீஸ் உயரதிகாரியான அஜ்மலிடம் ஒப்படைக்கப்படுகிறது. எவ்வளவு விசாரணை செய்தும் மர்ம நபரால் முன்கூட்டியே சொல்லப்படும் அடுத்தடுத்து நிகழும் அசம்பாவிதங்களை அஜ்மல் குழுவினர் துப்பறிய முடியாமல் திணறுகின்றனர். மக்கள் மர்ம நபரை தீர்க்கதரிசி என அழைக்கின்றனர். உண்மையிலேயே தீர்க்கதரிசி யார்? அவருக்கும் நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்பதை க்ரைம் த்ரில்லர் பாணியில் விவரிக்கிறது படம்.

  • திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ முதல் பார்வை !!
  • Prashanth Fertility Launches ‘Prashanth Fertility at Home’ to Strengthen Continuity of IVF Care and Support Better Treatment Outcomes
  • கமல்ஹாசன் – எஸ்.யு.அருண் குமார் கூட்டணிக்கு அமோக வரவேற்பு; ‘லுக் டெஸ்ட்’ காட்சிகள் வைரல்
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு
  • ‘ஹாய்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியில் – பத்திரிகை, ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme