Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

  • Home
  • News
  • Reviews
  • Videos
  • Home
  • 2023
  • *மதுவுக்கு எதிரான இதுபோன்ற படங்கள் அதிகம் வரவேண்டும் ; ‘மாவீரன் பிள்ளை’ படம் பார்த்துவிட்டு பாமக தலைவர் ராமதாஸ் பாராட்டு*

*மதுவுக்கு எதிரான இதுபோன்ற படங்கள் அதிகம் வரவேண்டும் ; ‘மாவீரன் பிள்ளை’ படம் பார்த்துவிட்டு பாமக தலைவர் ராமதாஸ் பாராட்டு*

admin April 24, 2023

மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என தமிழகத்தில் எதிர்ப்புக்குரல் அதிகரித்து வரும் நிலையில், மதுவினால் ஏற்படும் அவலத்தை குறித்தும் மதுவிற்காக போராடி உயிர்நீத்த சமூக ஆர்வலர்கள் குறித்தும் ஒரு அருமையான விழிப்புணர்வு படமாக தற்போது வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மாவீரன் பிள்ளை.

KNR ராஜா தயாரித்து, இயக்கி, அவரே கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் ‘காட்டுக் காவலாளி’ வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். நடிகர் ராதாரவி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். அதிலும் கடந்த பல வருடங்களாக மதுவிலக்கு வேண்டும் என்று கேட்டு பல்வேறு தரப்பு போராட்டங்களை நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. ராமதாஸ் ஐயா அவர்கள் இந்த படம் பற்றி கேள்விப்பட்டு இந்த படத்தை பார்த்தார்.

படம் பார்த்து முடித்ததும் மாவீரன் பிள்ளை படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த திரு ராமதாஸ் அவர்கள், “மதுவிலக்கிற்காக தொடர்ந்து போராடும் ஒரே கட்சி நமது பாட்டாளி மக்கள் கட்சி தான்.. சமூக விழிப்புணர்வு கருத்துக்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் அதிகம் வெளியானால், குற்றங்கள் குறையும்.. தமிழகத்தில் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்படும்” என்று பாராட்டியுள்ளார்.

அவரது இந்த பாராட்டை தொடர்ந்து மாவீரன் பிள்ளை படக்குழுவினர் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.

Post navigation

Previous தமிழரசன் திரை விமர்சனம்
Next *இணையத்தில் வைரலாகும் திருமதி உபாசனா காமினேனி கொனிடேலா – ராம் சரண் தம்பதிகளின் வளைகாப்பு விழாவின் பிரத்யேக புகைப்படங்கள்*

Search

//

We influence 20 million users and is the number one business and technology news network on the planet

You may have missed

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*
  • News

ஜிவி பிரகாஷ் குரலில், நயன்தாரா – கவின் இணையும் “ஹாய்” பட ஃபர்ஸ்ட் சிங்கிள்*

April 21, 2026
*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*
  • News

*”உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம்தான் ‘பிரேக்ஃபாஸ்ட்'”- நடிகை ரோஸ்மின்!*

April 21, 2026
*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*
  • News

*’உப்பு புளி காரம்’ ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான ‘பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!*

April 21, 2026
JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*
  • News

JIOHOTSTAR ANNOUNCES NEW FAMILY DRAMA ‘BROTHERS AND SISTERS’ FROM THE MAKERS OF UPPU PULI KAARAM*

April 21, 2026
Copyright © All rights reserved. | DarkNews by AF themes.