Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
தமிழரசன் திரை விமர்சனம் -indiastarsnow.com

தமிழரசன் திரை விமர்சனம்

Posted on April 23, 2023

கதாநாயகன் தமிழரசன் (விஜய் ஆண்டனி) ஒரு போலீஸ்காரர், ரத்தம் வழியும் இதயம். அவரும் அவரது அன்பு மனைவி லீனாவும் (ரம்யா நம்பீசன்) தங்கள் மகன் பிரபாகருக்கு (பிரணவ் மோகன்) இதயம் பலவீனமாக இருப்பதாகவும், எவ்வளவு விரைவில் மாற்று அறுவை சிகிச்சைக்கு செல்கிறார்களோ அவ்வளவு நல்லது என்பதை அறிந்ததும் அவர்களது வாழ்க்கையின் அதிர்ச்சியைப் பெறுகிறார்கள். காவல்துறையில் நேர்மையான ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் விஜய் ஆண்டனி. இவர் மனைவி ரம்யா நம்பீசன் மற்றும் தனது ஒரே ஒரு மகனுடன் நடுத்தர குடும்பத்தில் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவருடைய மகனுக்கு ஓட்டப்பந்தயத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எதிர்பாராத விதமாக திடீரென விஜய் ஆண்டனியின் மகன் ஓட்டப்பந்தயத்தின் போது மயங்கி விழுகிறார். பிறகு மருத்துவமனையில் சேர்த்து சிக்கிச்சை அளிக்கும் பொழுது அவனுக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது.

அந்த மருத்துவமனை, காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய துணியும் கட்டத்தில் இருக்கிறது. அந்த குழந்தைக்கு இதயம் தேவைபடுவதால் இதயம் மாற்று சிகிச்சை ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதற்காக 20 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்க, இதனால் நிர்வாகத்திற்கும் விஜய் ஆண்டனிக்கும் மோதல் ஏற்படுகிறது. மறுபுறம் விஜய் ஆண்டனி மகனுக்கு ஏற்பாடு செய்த இதயத்தை பணம் அதிகம் கொடுப்பதால் அமைச்சர் ஒருவருக்கு பொருத்தும் ஏற்பாடுகளும் நடக்கிறது.
இதனால் கோபமடையும் விஜய் ஆண்டனி, மருத்துவமனையில் தலைசிறந்த மருத்துவர் ஒருவரை பிணயக் கைதியாக அடைத்து வைத்து மகனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக களத்தில் இறங்குகிறார். இறுதியில் விஜய் ஆண்டனி மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதா என்பதே படத்தின் மீதிக்கதை.

காவல் ஆய்வாளராக வரும் விஜய் ஆண்டனி தன்னுடைய மகன் மருத்துவ பிரச்சனைக்காக போராடும் இடங்களில் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மற்றபடி முந்தைய படங்களின் வெளிப்பாடுகள் இந்த படத்திலும் தென்படுகிறது. நடுத்தர குடும்ப தாயாக ரம்யா நம்பீசன் கண் கலங்க வைக்கிறார்.

  • மூக்குத்தி அம்மன் 2 திரை விமர்சனம்
  • ராமாயணா திரை விமர்சனம்
  • VELS ORGANISES DIVINE PRAYERS FOR THE SUCCESS OF MOOKUTHI AMMAN 2
  • மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக வேல்ஸ் நிறுவனம் சார்பில் சிறப்பு வழிபாடு!
  • Mythri Movie Makers – G Squad presentFilmmaker Vishal Venkat’s Directorial, Starring Regena Cassandra and Nassar, Wraps Up Shooting
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme