Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்க

வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் உலக செஸ் சாம்பியன்களை கவுரவிக்கும் பிரமாண்ட நிகழ்ச்சி – ரூ.30 லட்சம்

Posted on July 25, 2022

வருகிற ஜூலை 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பிரமாண்ட ஏற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்துள்ளது. 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் செஸ் ஒல்ம்பியாட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

இந்த போட்டியில் இந்தியா சார்பில் உலக செஸ் சாம்பியன்களான அதிபன் பாஸ்கரன், எஸ்.பி.சேதுராமன், கார்த்திகேயன்

முரளி, வைஷாலி, பிரக்யானந்தா, குகேஷ் ஆகியோர் பங்கேற்று விளையாட உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியில்

இந்தியாவின் முகங்களாக இருக்கும் இந்த ஆறு மாணவர்களும் சென்னை வேலம்மாள் நெக்சஸ் பள்ளியைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பயிற்சியாளர்களாக இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நாராயண் ஸ்ரீநாத், ஷியாம் சுந்தர் மற்றும் பிரேசில் சார்பில் பிரியதர்ஷன் ஆகிய மூவரும் வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆவர். இது தவிர அண்மையில் துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வேலம்மாள் பள்ளியைச் சேர்ந்த ரிந்தியா, பிரணவ், சவிதா ஸ்ரீ, தேஜஸ்வினி, மிருத்தியுஞ்சய், வி.எல்.சந்தோஷ், மிதுன் பிரணவ் உள்ளிட்ட வீரர் தங்கம் வென்று அசத்தினர்.

இந்நிலையில், 44–வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் உலக செஸ் சாம்பியன்களையும், துபாயில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற வேலம்மாள் பள்ளி மாணவர்களையும் கவுரவிக்கும் நிகழ்ச்சியானது ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளி வளாகத்தில் ஜூலை 25-ந்தேதி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒலிம்பியாட் பயிற்சியாளர்கள் நாராயண் ஸ்ரீநாத், ஷியாம் சுந்தர், பிரியதர்ஷன் மற்றும் உலக செஸ் சாம்பியன்ஷிப் பயிற்சியாளர் வேலவன் ஆகியோரும் கவுரவிக்கப்பட்டனர். தமிழக சுகாதாரத் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த நிகழ்சிக்கு தலைமை தாங்கியதுடன், செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் வேலம்மாள் பள்ளியின் உலக செஸ் சாம்பியன்களையும் துபாயில் நடந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.30 லட்சம் பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, 44 –வது செஸ் ஒலிம்பியாட் இயக்குனரும், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளருமான பாரத் சிங் சவுகான் பங்கேற்றார். சிறப்பான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காரம்பாக்கம் எம்.எல்.ஏ.கணபதி, தொழிலதிபர் குமரவேல், பவன் சைபர்டாக் தலைமை அதிகாரி மைக் முரளிதரன், சென்னை மாவட்ட செஸ் கூட்டமைப்பின் செயலாளர் கணேசன், செஸ் பயிற்சியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மாணவர்களை ஊக்கவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிரமாண்டமான முறையில் செய்திருந்தார்.

  • ‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களின் தொடர் வெற்றி – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!
  • மெட்ராஸ் முதலை வங்கி 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது ‘Save The Reptiles’ நாடு தழுவிய விழிப்புணர்வு பயணம் தொடக்கம் 22 மாநிலங்கள் வழியாக 15,000 கி.மீ. பயணம்; ஊர்வன உயிரினங்கள் பாதுகாப்பு குறித்து 120 நாட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் சென்னை அருகே செயல்பட்டு வரும் மெட்ராஸ் முதலை வங்கி (Madras Crocodile Bank) தனது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக
  • நடிகை மஞ்சிமா மோகனின் அசத்தல் மேக்ஓவர்:
  • ஒன்ஸ் மோர் திரை விமர்சனம்
  • அட்டாக்கர்’ (Attacker) படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் வருண்.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme