Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
சுழல் தி வோர்டெக்ஸ்' முன்னோட்டம்

குறுகிய காலத்தில் ஐந்து கோடி பார்வைகளை பெற்று அசத்திய ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம்

Posted on June 12, 2022

அமேசான் பிரைம் வீடியோவின் முதல் தமிழ் ஒரிஜினல் தொடரான ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ முன்னோட்டம் வெளியான இரண்டு நாட்களில், பல்வேறு மொழிகளிலும், பல்வேறு இயங்கு தளங்களிலும் 50 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோவின் சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் வலைதள தொடர் இன்றைய சூழலில் பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தமிழ் புலனாய்வு நாடக படைப்புகளில் ஒன்றாகும். இது நம்முடைய தேசத்திலிருந்து மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து நாட்டின் பார்வையாளர்களிடமிருந்தும் அன்பை பெற்றிருக்கிறது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்ட இந்த தொடரின் முன்னோட்டம், அனைத்து மொழிகளிலும், இயங்குதளங்களிலும் உலகளவில் ஐந்து கோடி பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

‘சுழல் தி வோர்டெக்ஸ்’ மிகவும் சுவராசியமான, அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வசீகரிக்கும் தொடர்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரின் இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம் என அனைத்தும் தொடரை பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

புஷ்கர் & காயத்ரியின் பட்டறையிலிருந்து உருவாகியிருக்கும் ‘சுழல் தி வோர்டெக்ஸ்’ எனும் தொடர், 30க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளிலும் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் ஜூன் 17ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்படவிருக்கிறது.

  • ஜூலை 2 அன்று வெளியாகும் நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் தொடரான ‘சூப்பர் சுப்பு’வின் டிரெய்லர் வெளியானது!
  • சென்னையில் நடைபெற்ற “நாகபந்தம்” திரைப்பட பத்திரிககையாளர் சந்திப்பு !!
  • *’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!*
  • *சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!*
  • *இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்*
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme