Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்! வித்தியாசமான புரமோஷனில் படக்குழு

Posted on October 24, 2026

கன்னியாகுமரி ரசிகர்களையும் பொதுமக்களையும் கவரும் வகையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை ஆசியாவின் புகழ்பெற்ற பாலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறக்கவிட்டு படக்குழுவினர் வித்தியாசமான முறையில் புரமோஷன் செய்துள்ளனர்.

மகிழ் புரொடக்ஷன்ஸ் (Magizh Productions) சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில், தக்க்ஷன் விஜய் நடிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’. சமூக அக்கறை கொண்ட கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தொடக்கத்திலிருந்தே தனது புதுமையான விளம்பர முயற்சிகள் மூலம் கவனம் ஈர்த்து வருகிறது.

ஏற்கெனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். மேலும், கல்லூரிகளில் பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி இளைஞர்களிடையே படத்தைப் பிரபலப்படுத்தும் முயற்சியிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் படத்தின் போஸ்டரைப் பறக்கவிட்டு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வித்தியாசமான புரமோஷன், அப்பகுதி மக்களிடமும் சுற்றுலாப் பயணிகளிடமும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இப்படத்தில் G. M. குமார், வனிதா விஜயகுமார், லொள்ளு சபா ஜீவா, வாழை ஜானகி, அமுதவாணன், அப்புக்குட்டி, கஞ்சா கருப்பு, திவாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜா மற்றும் பாலா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். படத்தைச் சீயோன் ராஜா இயக்கியுள்ளார்.

வழக்கமான விளம்பர முறைகளைக் கடந்து, ஒவ்வொரு கட்டத்திலும் வித்தியாசமான முயற்சிகளைக் கையாண்டு வரும் ‘துரோகம் பழகு’ படக்குழு, அடுத்ததாகப் படத்தின் டிரெய்லரை வெளியிடத் தயாராகி வருகிறது. டிரெய்லர் வெளியீட்டுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புதுமையான புரமோஷன் முயற்சிகளால் கவனம் பெற்று வரும் ‘துரோகம் பழகு’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • மாரியப்பன் சின்னாவின் முதல் திரைப்படமான ‘Immortal’ அக்டோபர் 30-ம் தேதி Sony LIV-ல்
  • Mariyappan Chinna’s directorial debut Immortal to premiere on October 30 on Sony LIV
  • “My Role in ‘Haiku’ Reflects the Deepest Emotions of Women” -Actress Femina George
  • “‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்
  • மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்! வித்தியாசமான புரமோஷனில் படக்குழு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme