Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

“நடிகர் வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்”- ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்!

Posted on October 20, 2026

பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம், கேப்காம் (CAPCOM) நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரை முதன்முறையாகப் பெரிய திரைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திரைப்படத்தில், உலகின் தலைசிறந்த போர் வீரர்களாக நடிக்க ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. இதில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று தல்சிம்.

இந்தியாவின் சிறந்த ஆக்‌ஷன் நடிகர்களில் ஒருவரான வித்யுத் ஜாம்வாலை, புகழ்பெற்ற கேமிங் கதாபாத்திரமான தல்சிமாகத் தேர்வு செய்தது குறித்து இயக்குநர் கிட்டாவ் சகுராய் மனம் திறந்துள்ளார். இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தின் மூலம் வித்யுத் ஜாம்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். தற்காப்புக் கலைகளில் அவருக்குள்ள நிபுணத்துவத்தையும், தல்சிம் கதாபாத்திரத்துடன் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட தொடர்பையும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் இந்த படம் கொண்டு சேர்க்கும்.

திரைப்படத்தில் தல்சிம் கதாபாத்திரத்தைச் சேர்ப்பது குறித்து படக்குழுவினருக்கு முதலில் சில தயக்கங்கள் இருந்தாலும், தல்சிம் இல்லாமல் ஸ்ட்ரீட் ஃபைட்டர் திரைப்படமே முழுமையடையாது என்பதில் தான் உறுதியாக இருந்ததாக இயக்குநர் கூறுகிறார். ரசிகர்கள் உண்மையாகவே ரசித்துக் கொண்டாடும் வகையில் அந்தக் கதாபாத்திரத்தைத் திரையில் வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது விருப்பமாக இருந்ததாகவும் அவர் தெரிவிக்கிறார்.

இந்தக் கதாபாத்திரத்தில் வித்யுத் ஜாம்வால் நடிக்க ஒப்பந்தமானது புதிய பரிமாணத்தை அளித்ததாக இயக்குநர் குறிப்பிட்டார். தல்சிமின் பூர்வீகப் பின்னணியையும், அவரது தோற்றம் மற்றும் கதையின் அடிப்படையையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் எடுத்துச் செல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புவதாக வித்யுத் தெரிவித்ததையும் அவர் இங்கு குறிப்பிடுகிறார்.

மேலும் இயக்குநர் பகிர்ந்து கொண்டதாவது, “தல்சிம் கதாபாத்திரத்தை வித்யுத் முழுமையாகத் தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார். அந்தக் கதாபாத்திரத்துக்கு அவர் நியாயம் சேர்த்துள்ளார் என்பதை ரசிகர்கள் திரையில் பார்ப்பார்கள்” என்றார்.

பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ஃபைட்டர் திரைப்படம் தற்போது இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தைக் காண இப்போதே உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுங்கள்!

  • First time in Tamil cinema history: Screenplay of upcoming film ‘Censor’ by director Ramnath Palanikumar to be published as a book before the making of the movie
  • (no title)
  • இசையமைப்பாளர் பரத்வாஜின் மகள் ஜனனி பரத்வாஜ் சுயாதீன இசையமைப்பாளராக அறிமுகம்!
  • Street Fighter Director Kitao Sakurai Praises Vidyut Jammwal, Says “He’s More Dhalsim Than Dhalsim
  • “நடிகர் வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்”- ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme