Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டோரதி திரை விமர்சனம்

Posted on September 26, 2026

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘டோரதி’ (Dorothy) திரைப்படம், தமிழ் சினிமா இதுவரை பேசத் துணியாத மாற்று பாலின திருநங்கைகளின் உணர்வுகளையும் அவர்களை சமூகம் பார்க்கும் பார்வைகளையும் பேசும் துணிச்சலான மற்றும் முற்போக்கான படைப்பாக சொல்லும் ‘டோரதி’ திரைப்படம்.

மதுரையிலுள்ள கிராமம் ஒன்றில், சாதி வெறியால் தன் அம்மாவையும், அக்காவையும் இழந்த சுப்பு (சனந்த்), தன் அப்பா (‘வேட்டை’ முத்துக்குமார்), அண்ணன்களுடனும் வாழ்ந்து வருகிறார். தன் பால்ய காலம் முதல் உயிர்த்தோழனாக இருக்கும் கார்த்தியுடன் (ரிஷிகாந்த்) பொறுப்பில்லாமலும், ரவுடிஸம் செய்துகொண்டும் நாள்களைக் கடத்தும் சுப்புவுக்கு, தன் குடும்பம் மீதும், சாதிய அமைப்புகள் மீதும் வெறுப்பிருக்கிறது.


மதுரை மாவட்ட கிராமத்தில் 1990ல் இரு நண்பர்கள் பிரிக்க முடியாத திரைக்கதை கார்த்தியும் (ரிஷிகாந்த்), சுப்புவும் (சனந்த்) வளர்கிறார்கள். இவர்களது வாழ்க்கைக்குள் டோரதி (கீர்த்தி சுரேஷ்) என்னும் பெண் நுழையும்போது, சுப்புவிற்குள் நீண்ட நாட்களாக மறைந்திருக்கும் மாற்று பாலின அடையாளம் வெளிப்படத் தொடங்குகிறது. அதன் பின் இவர்களின் நட்பும், அவர்களைச் சுற்றியுள்ள சமூகமும் எப்படி மாறுகிறது என்பதே படத்தின் மையக்கதை.

மதுரை மண்ணைக்கே உரித்தான இளைஞர்களின் கோபமும், காதல், நட்பு ஆகியவற்றை தனது நடிப்பின் மூலம் திரையில் ரசிக்க வைத்துள்ளார் குறிப்பாக சமூகத்தால் ஏற்படும் அவமானங்கள் மற்றும் மன வேதனை, மனப்போராட்டம் என தனது கதாபாத்திரத்தைக் திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார் ரிஷிகாந்த்.

கதையின் நாயகி கீர்த்தி சுரேஷ். (டோரதி) திரையில் சிறிது நேரமே வந்தாலும் கதையின் தேவையான தாக்கத்தைக் திரையில் காண்போர்க்கு கொடுத்திருக்கிறார்.

டோரதி திரைப்படத்தில் ‘வேட்டை’ முத்துக்குமார், ராமச்சந்திரன் துரைராஜ், ஜீவா சுப்பிரமணியன், சௌந்தரராஜன் ஆகியோர் திரையில் காண்போரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளனர் தங்களது கதாபாத்திரத்தின் மூலம் திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளனர் .

இசைஞானி இளையராஜா இசை மற்றும் பின்னணி இசையும் இப்படத்தின் மிக முக்கிய தூணாக அமைந்திருப்பது மற்றும் இளையராஜாவின் பாடல்களும்தான். குறிப்பாக, இடைவேளைக் காட்சியின் பின்னணி இசை மற்றும் ‘கல்யாண விருந்து’ பாடல்
திரையில் காண்போரை ரசிக்க வைத்துள்ளது.

  • லெனின் பாண்டியன் திரை விமர்சனம்
  • தி கிராண்ட் மாஸ்டர் திரை விமர்சனம்
  • டோரதி திரை விமர்சனம்
  • டோரதி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!
  • RX 100 hero Kartikeya takes on a new challenge with COMEBACK
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme