Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது

Posted on September 23, 2026

மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கலந்த குடும்பக் கதையான ‘அப்பா குட்டி’ திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், ஆக்‌ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் பாசத்தை மையமாகக் கொண்ட படமாக உருவாகி இருக்கின்றது.

ஒரு அப்பாவுக்கும் அவரது மகளுக்கும் இடையிலான ஆழமான பாசமும், அவர்களுக்குள் இருக்கும் வலுவான உறவும்தான் இந்தப் படத்தின் முக்கியமான கதைக்களமாக அமைந்துள்ளது.

விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்திலும், ஆக்‌ஷன் நிறைந்த காட்சிகளிலும் நடித்து இருக்கின்றார். குடும்ப பாசம், உணர்ச்சிகள், விறுவிறுப்பான காட்சிகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.ஏற்கனவே வெளியான படத்தின் Second லுக் போஸ்டரில் விஜய் ஆண்டனியுடன் ஒரு சிறுமி இடம்பெற்றிருந்தார். இந்த போஸ்டர், அப்பா மற்றும் மகளுக்கு இடையிலான பாசமான உறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அக்டோபர் 16 வெளியீட்டை முன்னிட்டு படக்குழு விரைவில் தீவிரமான புரமோஷன் பணிகளை தொடங்க இருக்கின்றது.

நடிகர்கள்: ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லித்தன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணாறு ரமேஷ், லிஸ்ஸி ஆண்டனி, குமார் நடராஜன், விஜயன், பிரவீனா, ஹரிதா, ஹரிப்ரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Technical Crew

Writer & Director: Mu. Maran
Music Director: Vijay Antony
Director of Photography: Rajeev Rajendran
Editor: Vijay Antony
Art Director: A. Raja
Costume Designer: G. Anusha Meenakshi
Executive Producer: D. Naveen Kumar
Production Executive: Annamalai Sami
Technical Head: Janarthanan
Casting Director: Sugumar Shanmugam
Stunt: Rajasekar
Stills: Magesh
Sound Engineer: S. Chandhrasekar
Costumer: Selvaraj
Sound Design: Rahamadullah
Sound Effects: Vijay Rathnam
PRO: Rekha

அன்பு, குடும்ப உணர்வு மற்றும் ஆக்‌ஷன் கலந்த கதையுடன் உருவாகியுள்ள விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’,அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகின்றது.

  • நாய்ஸ் & கிரைன்ஸ் சென்னையில் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக அரங்கேற்றியது; யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை சிம்பொனி வடிவில் கொண்டாடிய ரசிகர்கள்
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்தார் சிவகார்த்திகேயன்
  • யுவன் ஷங்கர் ராஜாவின் வாக்கிங் த்ரூ தி ரெயின்போ (Walking Through the Rainbow) இந்திய மேடை இசையின் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்துள்ளது
  • விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்டோபர் 16-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது
  • Sony Vizha unveils ‘Ithu Namma Vibe’, bringing Tamil Nadu’s distinctive spirit to life
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme