சென்னை, தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில்,
கல்வித் துறையில் சிறந்து விளங்கும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிறுவனங்களைப் பாராட்டும் வகையில், டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் சார்பில், எஜு ஐகான்ஸ் (EDU ICONS) நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் பொதுத் தொடர்பு துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பு மற்றும் இணை துணைத் தலைவர் திரு. மணிகண்டன் நாயர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
கல்வியின் எதிர்காலத்தை வடிவமைக்கும் விதத்தில் சிறந்து விளங்கும் நபர்களையும் நிறுவனங்களையும் கௌரவிக்கும் இந்நிகழ்ச்சியில், தென்னிந்தியாவின் முன்னணி விமானப் பயிற்சி கல்லூரியான சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஏவியேஷன் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய, சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் நிறுவன தலைவர் திரு. ஆர். பூமிநாதன் அவர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் விருது வழங்கினார்.
விருதைப் பெற்றபோது, சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் நிறுவன தலைவர் திரு. ஆர். பூமிநாதன் அவர்கள், இந்த வெற்றிக்கு காரணமான அம்சங்களை விளக்கினார். அதில், மினி விமான நிலைய அமைப்பு, MIC-21 டர்போ என்ஜின்கள், காக்பிட் வசதியுடன் கூடிய மாதிரி விமானம் போன்ற அதிநவீன கட்டமைப்புகள், திறமையான ஆசிரியர்கள், தேசிய மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் இணைப்புகள், தொழில்துறை வழிநடத்தும் சர்வதேச பயிற்சிகள் மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் இன்ஃப்லைட் பயிற்சிகள் உள்ளிட்டவை முக்கிய பங்காற்றியுள்ளன என்று தெரிவித்தார்.
இதுவரை 32 ஆயிரத்திருக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ள சென்னைஸ் அமிர்தா, இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, மாலத்தீவு, மொரீஷியஸ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் முன்னணி நிறுவனங்களில் மாணவர்கள் பணியமர்வதற்கு வழிவகுத்துள்ளது.