Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மை லார்ட் திரை விமர்சனம்

Posted on February 14, 2026

வள்ளலாரின் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” (திருவருட்பா) என்ற வரிகள் சக உயிர்களிடத்தும் காட்டிய அளவற்ற ஜீவகாருண்யத்தை (பேரன்பு) மைய திரைக்கதையாக உருவாக்கி திரையில் காண்பவரை உருக வைத்துள்ளது இந் மை லார்ட் திரைப்படம்

கோவில்பட்டி பகுதியில் உள்ள குக்கிராமத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் பொழுது முத்து சிற்பி (சசிகுமார்), சுசீலா (சைத்ரா அச்சர்)  இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்ட இருவர்  திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணத்திற்கு பின் ஒரு நாள் நாயகி சுசீலா திடீரென மயங்கி விழுந்து அவர் உடலில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறுகிறது .

தனது மனைவிக்கு உடலில் உள்ள நோயை சரி செய்ய இருவரும் அரசு மருத்துவமனை முதல் தனியார் மருத்துவமனை வரை  இருவரும் ஏறி இறங்குகிறார்கள். தனியார் மருத்துவமனையில் நோயை சரி செய்ய  வட்டிக்கு பணம் வாங்கி தனது மனைவியின் நோயை சரி செய்ய முயற்சிக்கிறார்  ஒரு கட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேல் கடன் ஆகிவிடுகிறது.
இந்த கடனை முத்து சிற்பியால் வாழ்நாள் முழுவதும் அடைக்க முடியாத என தெரிந்துகொண்டு, அவர் மற்றும் அவருடைய மனைவி இருவருடைய கிட்னியை கொடுத்துவிடுங்கள் என கடன் கொடுத்தவர் மிரட்ட . இதற்கு பயந்து ஊரை விட்டு வெளியேறுகிறார்கள்.
நாயகனும் நாயகியும் ஊரை விட்டு தலைமறைவானதை வட்டிக்கு பணம் கொடுத்தவன் தனக்கு சாதமாக பயன்படுத்தி , தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் முத்து சிற்பி மற்றும் சுசீலா இறந்துவிட்டதாக நாடகத்தை நடத்தி, அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் பெற்று, அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் நிவாரண நிதியை அந்த வட்டி காரர் வாங்கி விடுகிறார். இதை அறிந்து மீண்டும் ஊருக்கு வருகிறார்கள் முத்து சிற்பி, சுசீலா. ஆனால், அந்த வட்டி விடுபவர் இவர்களை அடித்து துரத்தி விடுகிறார்.
இதைத் தொடர்ந்து பத்திரிகையாளரான சோமசுந்தரம் உதவியோடு தங்களுக்கான நீதியை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெறுகின்றனர்.
இதற்கிடையில்

மத்திய அமைச்சர் ஒருவருக்கு இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் அதிகாரமும் பதவியும் உயிருடன் இணைந்திருக்கும் அந்த அரசியல் உலகில், சாமானிய மனித உயிரின் மதிப்பு எவ்வளவு குறைவு என்பதை அதே மருத்துவமனைக்கு நாயகன் நாயகி இருவரும் தனது மனைவியின் நோயினை சரி செய்ய மருத்துவமனைக்கு செல்கின்றனர் அப்பொழுது அங்கு ஒருவரை சந்திக்க அவர் நாயகனின் கிட்னி அந்த அமைச்சருக்கு பொருந்துவதாக உள்ளதால் அவரிடம் உன் மனைவியின் நோயினை சரி செய்ய நாயகனின் கிட்னி தேவைப்படுவதாக கூறுகிறார் அதனை நம்பி நாயகனும் நாயகியும் அதே மருத்துவமனைக்கு செல்கின்றனர் இந்த நேரத்தில் மத்திய அமைச்சரின் மாற்று கிட்னி கிடைக்காமல் உயிரிழக்கும் தருவாயில் முத்து சிற்பி வள்ளலார் வழியில் அனைத்து உயிரும் ஒன்றுதான் என்ற காரணத்தால் “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் வழியில் நாயகன் எடுத்த முடிவு என்ன?

நாயகியின் உடலில் இருந்து ரத்தப்போக்கு அதிகமாக காரணம் என்ன?

சாமானிய மக்களின் சமுதாயத்தில் உடல் ரீதியாக மனரீதியாக சந்திக்கும் பிரச்சனை என்ன?
சாமானிய மக்களுக்கு சரியான நீதி கிடைக்கிறதா?
இது போன்ற கேள்விக்கு பதிலே மை லார்ட் திரைப்படத்தின் திரைக்கதை.



  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme