Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சிவகார்த்திகேயன் பராசக்தி திரை விமர்சனம்

Posted on January 10, 2026

பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பின் மூலம் திரையில் செழியனாகவே  வாழ்ந்துள்ளார் திரைக்கதைக்கு தனது நடிப்பின் மூலம் உயிர் கொடுத்துள்ளார்.. கல்லூரி மாணவரான செழியன் தமிழ் பற்றுடன்  தமிழ் மொழிக்கு ஆதரவாக போராட்டம் என வாழ்க்கையை வாழ்ந்து, அந்த செயலுக்கு ரயில் எரிப்பு போராட்டத்தின் போது தனது நண்பர் உயிரிழந்ததால் இனி புறநானூறு போராட்டக் குழு அமைதி வழியில் அறவழியில் செயல்பட வேண்டும் என்றும் இங்கு போராடினால் தான் எதுவும் கிடைக்கும் என்ற நிலையில் மீண்டும் போராட்ட களத்தில் குதிக்க, கடைசி வரை இரத்தம் சிந்தி அவர் போராடும் காட்சிகள் சிறந்த நடிகனாக  பல மடங்கு உயர்ந்து வெள்ளித்திரையில் ஜொலித்து நிற்கிறார் செழியன் சிவகார்த்திகேயன்.

ஹிந்தி திணிப்புக்கு எதிராக புறநானூறு என்ற குழு மூலம் பச்சையப்பாஸ் வேதியல் பிரிவு கல்லூரியின் மாணவராக சிவகார்த்திகேயன் போராடுகிறார். படத்தின் முதல் காட்சியிலேயே புறநானூறு போராட்ட குழுவின் உதவியுடன் ஒரு இரயிலை எரிக்கிறார். இதை தொடர்ந்து ரவிமோகன் இந்த கும்பலை பிடிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட தனிப்பிரிவு போலீஸ் அதிகாரியாக களம் இறங்குகிறார் .

இந்த மாணவர்களின் போராட்டம் இந்திக்கு எதிரானது அல்ல இந்தி திணிப்புக்கு எதிரானது என்று டெல்லியில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் போராட அப்பொழுது பிரதமர் இந்திரா காந்தி இன்றைக்கு எதிராக கையெழுத்து விளக்கம் சேகரிக்க வேண்டும் என்று வலியுறுத்த அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களும் உள்ள  புறநானூறு படையின் தலைவர் செழியனின் தலைமையில் தமிழக மட்டுமில்லாமல் கேரளா ஆந்திரா கர்நாடகா மைசூர் போன்ற மாநிலங்களிலும் இந்தி திணிப்புக்கு எதிராக போராடுபவர்கள் ஒன்றிணைந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராக கையெழுத்திடும் போராட்டம் ஈடுபட அவர்களை தடுத்து நிறுத்த தமிழகத்தின் முதல்வர் மத்திய அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட தனிப்பிரிவு போலீஸ் அதிகாரி ரவி மோகன் தலைமையில் புறநானூற்று படை 144 தடை உத்தரவு மூலம் அவர்களை சுட்டுக் கொள்ள முடிவு செய்கிறார் அவர்களிடம்

புறநானூற்றுப்படை தலைவர் செழியன் சிவகார்த்திகேயன் தம்பியாக அதர்வா அண்ணாமலை யுனிவர்சிட்டி பயிலும் இன்ஜினியரிங் மற்றும் தமிழ் மொழிக்கு ஆதரவாக போராடும் இளைஞனாக நடித்துள்ளார்.இருந்து புறநானூற்று படை மற்றும் இளைஞர்களின் எதிர்த்து எப்படி செயல்பட்டது அவர்களின் தமிழ் மொழி பற்று மற்றும் இந்து திணிப்புக்கான போராட்டம் வெற்றி பெற்றதா என்பது பராசக்தியின் திரைக்கதை .

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme