Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

வரலாற்றின் ஒரு பகுதியில் இருந்து உருவான ‘பராசக்தி’ எல்லோருக்கும் ஸ்பெஷல் படமாக இருக்கும்” – நடிகர் அதர்வா முரளி!

Posted on January 9, 2026

வசீகரமும், வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடி நடிப்பதில் ஆர்வம் கொண்டவருமான நடிகர் அதர்வா முரளி பல்வேறு வெற்றிப்படங்களில் தனது நடிப்பு திறனை நிரூபித்துள்ளார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார். ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் இருந்து தனது மனதுக்கு நெருக்கமான தருணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

“ஆகாஷ் பாஸ்கரன் சாரை இயக்குநராக எனக்கு முன்பே தெரியும். தற்போது அவர் படங்கள் தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ‘பராசக்தி’ கதையையும் அதில் என்னுடைய கதாபாத்திரம் குறித்தும் என்னிடம் முதலில் சொன்னவர் ஆகாஷ்தான். ‘பராசக்தி’ படத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இத்தகைய வலுவான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. ஸ்ரீலீலாவும் உற்சாகமான நடிப்பை கொடுத்துள்ளார். ஸ்ரீலீலாவின் திறமையான நடிப்பும் நடனமும் இந்தப் படம் வெளியான பிறகு இந்திய சினிமாத்துறையில் நிச்சயம் பேசுபொருளாகும்” என்றார்.

மேலும் பேசுகையில், “ரவி மோகன் என்னுடைய நீண்ட நாள் இன்ஸ்பிரேஷன். ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தில் அவரது நடனத்தை என் குடும்பத்தினருடன் பார்த்தது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. மழையில் அவர் தனியாக நடனமாடும் ஒரு குறிப்பிட்ட காட்சியை மிகவும் ரசித்து பார்த்தோம். ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது தன்னை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வார் என என் அம்மா அடிக்கடி சொல்வார். ரவியின் நடிப்பும் நடனமும் எனக்கு அதைத்தான் நினைவூட்டியது. நானும் அதை பின்பற்ற வேண்டும் என முடிவு செய்தேன்” என்றார்.

”சுதா மேடத்தை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். பல கல்ட் மாஸ்டர் பீஸ் படங்களை உருவாக்கிய சுதா கொங்கரா தன்னை மேடம் என அழைக்க வேண்டாம் என்றுதான் முதலில் சொன்னார். அவரது பெருந்தன்மை என்னை வியக்க வைத்தது”.

”வெள்ளித்திரையிலும் நிஜத்திலும் இப்போது சிவகார்த்திகேயன் என் சகோதரர். சினிமாவில் அவரது வளர்ச்சியை நான் எப்போதும் வியந்து பார்த்திருக்கிறேன். சினிமாவில் அவர் தனது ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கிறார். அவரின் வெற்றிகளைப் பார்த்து பல தருணங்களில் மகிழ்ந்திருக்கிறேன். நமது மாநிலத்தை வடிவமைத்த மாணவர் இயக்கத்தை பிரதிபலிக்கும் வரலாற்றின் ஒரு பகுதியாக ‘பராசக்தி’ உருவாகியுள்ளது. உங்கள் அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும் படமாக இருக்கும்” என்றார்.

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள ‘பராசக்தி’ படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகும்.

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme