Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சல்லியர்கள் திரை விமர்சனம்

Posted on January 2, 2026


இலங்கை தமிழ் ஈழ பூர்வ குடி மக்கள் விடுதலைக்காக போராடிய போராளிகளும் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகள் ஏராளம், அவற்றை பல்வேறு படைப்பாளர்கள் தங்கள் உணர்வுகளை திரை படங்கள் மூலம் திரையில் உலகக்கு எடுத்துரைக்க முயற்சித்திருக்கிறது. அந்த வகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மருத்துவப் பிரிவு எப்படி செயல்படாது, மருத்துவர்கள் அவர்களது பதுங்கு குழி மருத்துவமனை மற்றும் உயிரை துச்சமாக நினைத்து அதில் பணியாற்றிய மருத்துவர்களின் மனிதத்தன்மையும், சிக்கள ராணுவத்தின் மிருகத்தன்மையையும் திரையில் காண்போரை கண்கலங்க வைக்கும் படைப்பு தான் ‘சல்லியர்கள்’.

சிங்கள ராணுவத்தை எதிர்த்து போரிடும் புலிகள் அமைப்பினர் காயமடைந்தால், அவர்களை காப்பாற்றுவதற்காக 3 கிலோமீட்டர் தூரத்தில் ஒன்று என்ற அடிப்படையில் புலிகள் அமைப்பு பதுங்கு குழி மருத்துவமனைகள் அமைக்கப்படுகிறது. அந்த மருத்துவமனையில் பணியாற்றும் பெண் மருத்துவரான நாயகி சத்யதேவி, சரியான உணவு, உறக்கம் இன்றி, பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவி செய்வதற்காக தலைமை மருத்துவமனையில் இருந்து மருத்துவர் மகேந்திரன் அனுப்பப்படுகிறார்.

சிங்கள ராணுவம் புலிகள் பதுங்கு குழி மருத்துவமனைகள் அழிக்க அதிகாலை நேரத்தில் தாக்குதல் நடந்த முடிவு செய்கிறது இதற்கிடையே, புலிகள் அமைப்புகளின் மருத்துவ குழுவை அழித்தால், அவர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்று திட்டம் போடும் சிங்கள ராணுவம், போராளிகளின் மருத்துவ பணிகளுக்கு எதிராக செயல்பட தொடங்குகிறது. அதே சமயம், தமிழ் ஈழ மருத்துவர்கள், போராளிகளாக இருந்தாலும் சரி, எதிரிகளாக இருந்தாலும் சரி, உயிருக்காக ஆயுதம் இன்றி மருத்துவ உதவி கேட்டால்  காப்பாற்றுவதற்காக தங்களது ரத்தம் கொத்து எதிரியின் உயிரையும் காப்பாறுகிறார்கள்
விடுதலை புலிகள் அமைப்பு மருத்துவர்  போரில் துப்பாக்கி ஏந்துவது மட்டுமே வீரம் இல்லை . துப்பாக்கி எடுக்கும் ஒவ்வொருவரும் தன் குலத்தை காக்கும் சாமியாக வணங்குவதற்காக மருத்துவர் கூறும் வசனம் அவரது   சேவையையும், வீரத்தையும் திரையில் காண்போரை சிந்திக்கவும் விடுதலைப்புலிகளின் நோக்கம் எதிர்ப்பதல்ல விடுதலைதான் என்பதை  உணர்த்துகிறது ‘சல்லியர்கள்’ திரைக்கதை.

  • ஜனநாயகம் திரை விமர்சனம்
  • தண்டு செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அரிய வகை இரத்த நோயிலிருந்து மீண்டவர் தனது கொடையாளரைச் சந்தித்தார்.
  • EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE 2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது
  • EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola
  • காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme