ஜான் டோ திரை விமர்சனம்

ஜான் டோ திரை விமர்சனம்-indiastarsnow

மதுமிதா சுந்தரராமன் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் சஞ்சனா நடராஜன்
,நீரவ், அனுபமா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஜான் டோ திரைப்படம்திரைப்படம் உளவியல் கிரைம் திரில்லர் திரைப்படமாக இன்று திரையரங்கில் வெளியாகிய மக்களின் பாராட்டோடு பெரு ஆதரவை பெற்று வருகிறது.

ஜான் டோ படத்தின் நீளம் (சுமார் 2 மணி நேரம் 29 நிமிடங்கள்)
ஜான் டோ திரை விமர்சனம்-indiastarsnow

தமிழ்நாடு-கேரள எல்லையில் காணாமல் போன ஒரு சிறுவனைப் பற்றி சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு (அர்ஜுன் தாஸ்) விசாரிக்கிறார். இந்த விசாரணை மேலும் 17 குழந்தைகள் காணாமல் போன ஒரு பெரிய தொடர் கொலை வழக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது ஜான் டோ திரைப்படத்தின் திரைக்கதை.

அர்ஜுன் தாஸின் அழுத்தமான நடிப்பு, உணர்ச்சிபூர்வமான திரைக்கதை மற்றும் இரண்டாம் பாதியில் வேகத்தைக் கூட்டும் எதிர்பாராத திருப்பங்கள் திரைப்படத்தை காண்போரை ரசிக்க வைக்கிறது.

அர்ஜுன் தாஸின் தனது அனுபவ நடிப்பின் மூலம் திரைக்கதைக்கு உயிர் கொடுத்துள்ளார் ஆக்‌ஷன் திரில்லராக மட்டுமில்லாமல், குற்றங்களால் ஏற்படும் உணர்ச்சிபூர்வமான பாதிப்புகளையும், சந்துருவின் கடந்த காலத் தந்தை-மகன் உறவின் வலிகளையும் ஜான் டோ திரைக்கதை திரையில் காண்போரை வெகுவாக ரசிக்க வைத்துள்ளது.