
பனிவிழும் இரவு
நடிகர் & நடிகைகள்- விபரம்-👇
அருண் கார்த்தி( ஜெகே)
எனாக்க்ஷி கங்குலி(சபிதா)
கருப்பு நம்பியார்( நாகராஜ்)
சேரன்ராஜ்(மதிமாறன்)
சரவணசக்தி(வாட்ச்மேன்)
செ. ரா. ராஜேஷ்(சோலை ராஜ்)
கஜராஜ்(டாக்டர்.சரவணன்)
சுருளி (சுருளி)
உமர்(பால்காரன்)
வினோத்(வினோத்)
அரண்டவனுக்கு இரண்டதெல்லாம் பேய், கலன், நாதுராம் கோட்சே, போலிஸ் பேமிலி, ஆட்ரிக்கா(மலையாளம்)
போன்றப் படங்களின் ஒளிப்பதிவாளர் திரு. ஜெயக்குமார் தங்கவேல் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சாதுவன் படத்தின் இசையமைப்பாளர் சதாமுருகன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பாடல்களை சதாமுருகன், சந்தோஷ் ஆறுமுகம் எழுதியுள்ளனர்.
அரண்டவனுக்கு இரண்டதெல்லாம் பேய், கிளாஸ்மேட்ஸ், போலீஸ் ஃபேமிலி படத்தின் படத்தொகுப்பாளர்.
எம். எஸ். செல்வா மற்றும் கமாண்டோ வின் லவ் ஸ்டோரி, இருமுனை, அந்தாதி, பகையறு, இன்ஸ்பெக்டர் சூரியா, படங்களின் எடிட்டர் சி.ஆர்.புவனேஷ் எடிட்டர்களாக பணி செய்துள்ளார்.
டிசைனர் விட்டல் ரமணன்.
மக்கள் தொடர்பு–சரண்
தயாரிப்பு–சதாமுருகன், தங்கவேல் வல்லவர்சாமி,
ஓம் செல்வா
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் செ. ரா. ராஜேஷ்.

இயக்குநர் செ.ரா. ராஜேஷ் இயக்கத்தில், அருண் கார்த்தி மற்றும் எனாக்ஷி கங்குலி நடிப்பில் கொடைக்கானல் பின்னணியில் வெளியாகியிருக்கும் மர்ம மற்றும் க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘பனி விழும் இரவு’.
திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இளம் ஜோடியான ஜே.கே (அருண் கார்த்தி) மற்றும் சபிதா (எனாக்ஷி கங்குலி) தங்களது திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் பிடிப்பிற்காக (Pre-wedding shoot) கொடைக்கானலில் உள்ள ஒரு தனிமையான பங்களாவிற்குச் செல்கிறார்கள். அங்கு எதிர்பாராதவிதமாக சபிதா திடீரென மாயமாகிறார். தனது மனைவியைக் கண்டுபிடித்துத் தருமாறு ஜே.கே காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இன்ஸ்பெக்டர் மதிமாறன் (சேரன்ராஜ்) தலைமையில் போலீஸ் விசாரணை தொடங்குகிறது. ஒரு சாதாரண கடத்தல் புகாராகத் தொடங்கும் இந்த வழக்கு, விசாரணையின் போது பல திடுக்கிடும் திருப்பங்களைச் சந்தித்து எப்படி முடிகிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் அருண் கார்த்தி காதல், பதற்றம், மனைவியைத் தேடும் தவிப்பு என எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இன்ஸ்பெக்டராக வரும் சேரன்ராஜ் கம்பீரமான மற்றும் அனுபவமிக்க நடிப்பால் விசாரணைக் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.
ஜெயக்குமார் தங்கவேலின் ஒளிப்பதிவு கொடைக்கானலின் அழகையும், இரவு நேர பனிமூட்ட த்ரில்லர் சூழலையும் கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. சதாமுருகனின் பின்னணி இசை த்ரில்லர் காட்சிகளுக்கு ஓரளவுக்கு வலு சேர்த்துள்ளது.