Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

சாரா திரை விமர்சனம்

Posted on December 7, 2025


நடிகர்கள் :- சாக்ஷி அகர்வால், விஜய் விஸ்வா, யோகி பாபு, பொன்வண்ணன், தங்கத்துரை, ரோபோ சங்கர், அம்பிகா, மிரட்டல் செல்வா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் செல்லக்குட்டி,
இசை – கார்த்திக் ராஜா,
ஒளிப்பதிவு –  லக்ஷ்மன் குமார்,
படத் தொகுப்பு – ஜான் ஆபிரகாம், உடைகள் – ராஜன், கலை – சுரேஷ் கல்லேரி,
பாடலாசிரியர் – சினேகன் – அருண் பாரதி,
நடனம் – கேசவன்,
சண்டை பயிற்சி – மிரட்டல் செல்வா, ஒப்பனை – கரிசூழ்ந்தான்,
நிழற்படம் – சுரேஸ்,
இணை இயக்குநர் – கோ. செங்கேனி, எழுத்து – இயக்கம் – செல்லகுட்டி, தயாரிப்பு நிறுவனம் Viswa Dream World, தயாரிப்பாளர் ஸ்ரீ பட்டவன்,
மக்கள் தொடர்பு ஏ.ராஜா.

நாயகன் செல்லகுட்டி மற்றும்சாக்ஷி அகர்வால் இருவரும் சிறுவயது நண்பர்களாக பள்ளி பருவத்தில் நாளைக்கு மூளைக்காய்ச்சல் நோய் ஏற்பட தான் படிக்கும் அனைத்து மறந்து விடுகிறது அதனால் நாயகன் நாயகி சாட்சி அகர்வாலுக்கு முழு ஆண்டு தேர்வை முழுவதுமாக நாயகன் எழுதிக் கொடுத்த அந்தத் தேர்வு நாயகி வெற்றி பெறுகிறார் நாயகன் தோல்வி அடைகிறார் அதனைத் தொடர்ந்து நாயகி நாயகன் செய்த உதவிக்கு தனது உயிரையும் கொடுப்பதாகவும் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று உறுதி கொடுத்தார் நாயகி மற்றும் நாயகி மேற்படிப்புக்கு வெளியூர் சென்று மேற்படிப்பைத் தொடர்ந்து இன்ஜினியராக பணியாற்றுகிறார்  கட்டுமான நிறுவனம் ஒன்றில் பொறியாளர் சாக்ஷி அகர்வால், தன்னுடன் பணியாற்றும் விஜய் விஷ்வாவை ஐந்து வருடங்களாக காதலிக்கிறாள். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் அவர்கள் திருமண ஏற்பாட்டின்  போது பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன.  சாரா தலைமை கட்டிட பொறியாளராக பணியாற்றும் கட்டுமான நிறுவனத்தில் கூலி பெறும் சாதாரண கட்டுமான தொழிலாளியாக வேலை செய்கிறார் செல்லக்குட்டி. தன்னுடைய தாயின் உயிரைக் காப்பாற்ற போராடுகிறார். ஒரு நாள் நீண்ட வருடங்களுக்கு பிறகு சாக்ஷி அகர்வாலை இந்த கட்டுமான நிறுவனத்தில் பொறியாளர் இருப்பதை பார்த்ததும் இருவரும் அவர்கள் பள்ளி பருவ நட்பு நினைவு கொள்கிறார்கள்.  இருவரின் சந்திப்பைப் பற்றி செல்லக்குட்டி தன் அம்மா அம்பிகாவிடம் கூறுகிறார். ஒரு எதிர்பாராத விபத்து ஒன்றில் சாக்ஷி அகர்வாலும், அம்பிகாவும்  சந்தித்து கொள்கிறார்கள். அம்பிகாவை மருத்துவமனையில் சேர்த்து  அவரை அக்கறையுடனும், அன்பாகவும் கவனித்ததால் சாக்ஷி அகர்வால் மீது அதிகம் பிரியம் ஏற்பட்டது என்று தன் மகனிடம் சொல்கிறார். மேலும் நீ உன் தோழியான சாக்ஷி அகர்வாலை திருமணம் செய்து கொள் என்று கூறுகிறார். தோழியை எப்படி திருமணம் செய்து கொள்வது? என்ற குழப்பத்தில்  செல்லக்குட்டி இருக்கும் போது அம்மா அம்பிகா மீண்டும் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. அவர், சாக்ஷி அகர்வாலை நேரில் பார்த்தால் தான் உயிர் பிழைப்பேன் என்கிறார். அம்மா மீது அதிக அக்கறை கொண்டிருக்கும் செல்லக் குட்டி அம்மாவின் பேச்சை கேட்டு தன்னுடைய தோழி சாக்ஷி அகர்வாலை சந்தித்து உதவி கேட்க திட்டமிடுகிறார். இந்நிலையில், கட்டுமான நிறுவனத்தின் காவலாளியாக இருக்கும் ரோபோ சங்கர் சாக்ஷி அகர்வாலை கொலை செய்ய முயற்சிக்கிறார். கட்டுமான நிறுவனத்தில் ரோபோ சங்கர் சாக்ஷி அகர்வாலை தாக்குகிறார். அதை தொடர்ந்து செல்லக்குட்டி, ரோபோ சங்கரை தாக்கி சாக்ஷி அகர்வாலை கடத்துகிறார். மேலும் அவரது காதலன் விஜய் விஸ்வா, மற்றும் சாக்ஷி அகர்வால் தம்பியையும் கடத்தி விடுகிறார்.
நாயகன் செல்லக்குட்டி தாயின் ஆசையை நிறைவேற்றினாரா?
நாயகன் செல்லக்குட்டி தனது பள்ளிப் பருவத்தில் செய்த தியாகத்திற்கு நாயகி சாட்சி அகர்வால் துணை நின்றார்?
விஜய் விஸ்வாவின் காதல் நிறைவேறியதா?
நாயகியின் செயலால் நாயகன் செல்ல குட்டி மனநிலை எவ்வாறு பாதிக்கப்படுகிறது?
இறுதியில் நாயகன் செல்லக்குட்டி சாட்சியாக அவர்களுடன் இணைந்து தனது தாயின் ஆசிரியர் நிறைவேற்றினார் என்பது படத்தின் விறுவிறுப்பான திரை கதை.

  • மம்மட்டியான் ஸ்டார்ஸ் இணைத்தொடர் விமர்சனம்
  • ஹார்டின் திரை விமர்சனம்
  • பிரம்மாண்டமாக நடந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா
  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme