Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நிர்வாகம் பொறுப்பாளர் திரை விமர்சனம்

Posted on December 7, 2025

RK DREAM FACTORY சார்பில் D ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், KMP productions சார்பில் M புவனேஸ்வரன் மற்றும் SBM studios சார்பில் ஷாஜு C இணைந்து தயாரிக்கும் திரைப்படம் “நிர்வாகம் பொறுப்பல்ல”. பேய் இருக்க பயமேன் திரைப்படத்தை இயக்கி நடித்த சீ கார்த்தீஸ்வரன் இத்திரைப்படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ளார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஶ்ரீனிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், MR அர்ஜுன், மிருதுளா, ஜெயஶ்ரீ சசிதரன், தீட்சண்யா, மஞ்சு மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரு. ஶ்ரீகாந்த் தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைக்க, இசையமைப்பாளர் தேவா, சின்னகுயில் சித்ரா, நடிகர் ஜெய், மற்றும் சைந்தவி ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர், சஜின் C படத்தொகுப்பும், NS ராஜேஷ்குமார் ஒளிப்பதிவாளராகவும், சுரேஷ் சித் நடன இயக்குநராகவும், ஜாக்கி ஜான்சன் ஸ்டண்ட் மாஸ்டராகவும் பணி புரிந்துள்ளனர்.

உலகில் ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் சிறப்பாக “சந்தோசமாக” வாழ்ந்து தான் வருவார்கள் என்பதற்கு சான்றாக நிர்வாகம் பொறுப்பல்ல திரைப்படத்தின் மையக் கருவாகக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு (பாடமாக)படமாக திரையில் சிந்திக்கவும் ரசிக்கவும் வைத்துள்ளது நிர்வாகம் பொறுப்பல்ல திரைப்பட குழு.

வறுமையில் வாழும் மக்களையும், பேராசை கொண்ட  மக்களை ஏமாற்றி எப்படி எல்லாம் பணம் பறிக்கிறார்கள் என்பதை டார்க் காமெடி வகையில் திரையில் காண்போரை சிந்திக்கவும் ரசிக்கும் படமாக நிர்வாகம் பொறுப்பல்ல இத்திரைப்படம் உருவாகி உள்ளது. நிஜத்தில் பணத்தை பறிகொடுத்தவர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

தினம் தினம் செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் நாம் அதிகம் கடந்து செல்லும் செய்தி ‘ஆன்லைன் மோசடி’. ஆசை வார்த்தைகளை நம்பி மக்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என்பதை மையமாக வைத்து, ஒரு விழிப்புணர்வு கலந்த கமர்ஷியல் படமாக வெளியாகியிருக்கிறது எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’. பணத்தாசை காட்டி ஏமாற்றுபவர்களை விட, ஏமாறுபவர்கள் இருக்கும் வரை மோசடிகள் தொடரும் என்பதை இப்படம் அழுத்தமாக பேசுகிறது. படத்தின் நாயகன் கார்த்தீஸ்வரன் பார்ப்பதற்கு மிகவும் சாதுவான தோற்றத்தில் இருக்கிறார். ஆனால், அவர் செய்யும் காரியங்களோ அதிரடியானவை.

மக்களின் பேராசையை மூலதனமாக வைத்து, பல்வேறு நூதன வழிகளில் மோசடி செய்து சுமார் 5000 கோடி ரூபாய் வரை பணத்தை சுருட்டுகிறார். அந்த பெரும் பணத்தோடு வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிடும்போது, எதிர்பாராத விதமாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிதியிடம் மாட்டிக்கொள்கிறார். காவல்துறையின் பிடியில் சிக்கிய கார்த்தீஸ்வரன் செய்த மோசடிகள் என்னென்ன?
நாயகன் எதனால் இவ்வளவு சாமர்த்தியமாக மக்களை ஏமாற்றினார்?
இறுதியில் போலீஸ் பிடியிலிருந்து தப்பித்தாரா அல்லது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டாரா?

என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.

  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
  • RS INFOTAINMENT’S MANDAADI UNVEILS ELECTRIFYING PROMO SONG FEATURING SOORI’S VIRAL DANCE MOVES; CROSSES 75 MILLION+ SOCIAL MEDIA VIEWS
  • 7.5 கோடி பார்வைகளைக் கடந்த ‘மண்டாடி’ புரமோ பாடல்!
  • ஜனநாயகம் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme