
ஶ்ரீலட்சுமி ட்ரீம் ஃபேக்டரி பேனரில் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த டாக்டர் ஆர்.பிரபாகர் ஸ்தபதி தயாரிக்கும் திரைப்படம் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’. துர்கா தேவி பாண்டியன் இதன் இணைத் தயாரிப்பாளர் ஆவார்.
கும்பகோணம் கல்லூரி பின்னணியில் மதங்கள் கடந்த காதலை மண் மணத்தோடு சொல்லும் இந்த ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ கெளஷிக் ராம் நாயகனாக நடிக்க, ‘கொண்டல்’ மலையாள படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் இதயங்களோடு இணைந்த பிரதிபா தமிழில் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
கும்பகோணம் பகுதியில் ஒரு கிராமத்தில் திருவிழா நடைபெறுகிறது இதில் எம் சி சி மாணவியாக கிறிஸ்டினா பாதுகாப்புக்கு செல்கிறார் அப்போது நாயகன் உயிரை காப்பாற்றுகிறார் நாயகி அதன் மூலம் நாயகனுக்கு காதல் ஏற்பட ஒரு தலையாக காதலிக்கிறார் நாயகன் மற்றும் நாயகனுக்கு தாய் இல்லாததால் தனது அப்பா தம்பி உடன் வாழ்ந்து வருகிறார் +2 முடித்த நாயகனுக்கு அவர் வரும் என் காரணமாக அவர் அப்ப வெளிநாட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்கிறார் இதற்கிடையில் நாயக நாயகியை சந்திக்க தனது நண்பனை கல்லூரியில் விடுதிறக்கச் செல்லும் பொழுது அது நாயகியை பார்க்க தானும் படிக்க வேண்டும் என்று கல்லூரியில் சேர்கிறார் இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரின் காதல் நிறைவேறியதா இல்லையா என்பதை படத்தின் கதை?
கிறிஸ்டினா கிறித்துவ பெண் இந்து கதிர்வேலனை திருமணம் செய்தாரா?
இவர்கள் காதலுக்கு மதம் தடையா? இல்லை மனிதர்கள் தடையா?
இறுதியில் கிறிஸ்டினா கதிர்வேலன் காதல் எந்த மாதிரி சூழ்நிலையில் நிறைவேறியது போன்ற கேள்விக்கு பதில் கிறிஸ்டினா கதிர்வேலன் காதல் திரைப்படத்தின் திரைக்கதை.
மேலும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், டி.எஸ்.ஆர்., அருள்.டி.ஷங்கர், சிலுமிஷம் சிவா, ரவி விஜே, கனா காணும் காலங்கள் புவனேஸ்வரி, சஞ்சய்வர்மன், ஆதித்யா டிவி விக்கி, சத்யா, மைக்கேல் உள்ளிட்டோர் கதைக்கு உயிர் கொடுத்து நடிக்கின்றனர்.