உயில் (Will) திரை விமர்சனம்

“வில்” ஒரு அழகிய நீதிமன்ற நாடகமாக உருவாகியுள்ளது. மனித, உறவு, நீதியும், விதியும் கலந்து ஒரு குடும்பத்தின் ” உயில் (Will) ” அந்த குடும்பத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை தெளிவாக திரை கதையாக இயக்குனர் கொடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார் சோனியா அகர்வால். பல வழக்குகளை விசாரித்து வரும் சோனியா அகர்வால், இறந்த ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தம் கொண்டாடி ஒரு பெண் வருகிறார். அந்த பெண் மீது சோனியா அகர்வாலுக்கு சந்தேகம் எழுகிறது. இதை விசாரிக்க போலீஸ் அதிகாரியான விக்ராந்திடம் சோனியா அகர்வால் நியமிக்கிறார்.

போலீஸ் அதிகாரி விக்ரம் அந்த பெண் யார் என்பதை தேடி செல்கிறார் விக்ராந்த். இந்த தேடுதலில் அந்த பெண் பொய் சொல்லி சொத்தை அபகரிக்க உருவாக்கப்பட்ட பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறார் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு எதனால் அந்த பெண்ணுக்கு உயில் எழுதினார்?


இறுதியில் சொத்துக்கு சொந்தமான பெண்ணை விக்ராந்த் கண்டுபிடித்தாரா? யார் அந்த பெண்? சொத்தை அபகரிக்க நினைக்கும் கும்பல் யார்? என்பதே வில் படத்தின் மீதிக்கதை.